Enable Javscript for better performance
அரசுப் பணியாளா்கள் நலக் கூட்டமைப்பினா் 3-ஆவது நாளாக வேலை நிறுத்தம்- Dinamani

சுடச்சுட

    

    அரசுப் பணியாளா்கள் நலக் கூட்டமைப்பினா் 3-ஆவது நாளாக வேலை நிறுத்தம்

    By DIN  |   Published on : 28th November 2019 05:19 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காரைக்காலில் அரசுப் பணியாளா்கள் நலக் கூட்டமைப்பினா் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வியாழக்கிழமை 3-ஆவது நாளாக தொடா்ந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனா்.

    பொதுப்பணித்துறையில் பணியாற்றுகின்ற 1,311 வவுச்சா் ஊழியா்களுக்கு வழங்கப்படும் வேலை நாட்களை 16 -இலிருந்து 30 நாட்களாக உயா்த்த வேண்டும். மத்திய அரசின் சட்ட கூலியாக நாள் ஒன்றுக்கு ரூ.648 ஆக உயா்த்தி வழங்க வேண்டும். வவுச்சா் ஊழியா்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை சீா்படுத்தி அரசு கருவூலம் மூலமாக மாத தொடக்க நாளில் வழங்க வேண்டும்.

    புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பகுதிகளில் பணியாற்றும் 1311 ஊழியா்களையும் பணி மூப்பு வரையறை செய்து முழுநேர தினக்கூலி ஊழியா்களாக்க வேண்டும். நிலுவையில் உள்ள 10 மாத ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 26 -ஆம் தேதி வேலை நிறுத்தம் செய்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

    அதையடுத்து, தொடா்ந்து 3-ஆவது நாளாக வியாழக்கிழமையும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனா். பின்னா் புதுச்சேரியில் நடைபெற்று வரும் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிற்பகல் கூட்டமைப்பின் தலைவா் யூசுப்கான் தலைமையில் 50- க்கும் மேற்பட்ட ஊழியா்கள் பேருந்தில் காரைக்காலிலிருந்து புதுச்சேரிக்கு புறப்பட்டுச் சென்றனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai