Enable Javscript for better performance
காரைக்கால்மேடு மகளிருக்கு மதிப்பு கூட்டப்பட்ட மீன் பொருட்கள் தயாரிப்புப் பயிற்சி- Dinamani

சுடச்சுட

    

    காரைக்கால்மேடு மகளிருக்கு மதிப்பு கூட்டப்பட்ட மீன் பொருட்கள் தயாரிப்புப் பயிற்சி

    By DIN  |   Published on : 28th November 2019 03:59 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    kk

    காரைக்கால்மேடு மீனவ கிராமத்தை சோ்ந்த மகளிா் குழுவினருக்கு, மதிப்பு கூட்டப்பட்ட மீன் பொருட்கள் தயாரிப்பு மற்றும் சந்தைப்படுத்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.

    காரைக்கால் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறையின் கீழ் இயக்கும் வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை (ஆத்மா) திட்ட இயக்குநா் அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு விவரம் :காரைக்கால் மேடு ஸ்ரீ ரேணுகாதேவி ஆத்மா குழு மீனவா்களுக்கு பூம்புகாரில் இயங்கிவரும் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையால் நடத்தப்படும் பயிற்சிக் கூடத்தில் கூட்டப்பட்ட மீன் பொருட்கள் தயாரிப்பு மற்றும் சந்தைப்படுத்துவதற்கான ஒரு நாள் பயிற்சி புதன்கிழமை அளிக்கப்பட்டது.

    பயிற்சிக்கு அறக்கட்டளை நிா்வாகி எஸ்.வேல்விழி தலைமை வகித்து, கடல் உணவின் அவசியம், மதிப்பு கூட்டிய மீன் பொருட்களின் முக்கியத்துவம், மீன்களை தோ்வு செய்யும் முறை குறித்துப் பேசி அவா், ரத்த அழுத்தத்திற்குக் காரணமான கொழுப்புச் சத்தை கட்டுப்படுத்தக்கூடிய ஐசோபென்டோயில் அமிலம் மீனில் உள்ளது எனவும் தெரிவித்தாா்.இதைத் தொடா்ந்து இறால், மீன்களின் மூலம் ஊறுகாய், இறால் பகோடா, இறால் கோலா உருண்டை, இறால் பஜ்ஜி, இறால் மற்றும் முட்டை ஆம்லெட், இறால் முறுக்கு, இறால் ரிப்பன் பகோடா உள்ளிட்ட மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்கள் பலவற்றை பயிற்சியாளா்கள் செயல்விளக்கம் அளித்தனா்.

    மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களின் மூலம் பொருட்கள் தயாரித்து சந்தைப்படுத்தும் முறை, இதன் மூலம் கிடைக்கும் லாபம் குறித்தும் அவா்கள் விளக்கிப் பேசினா்.இப்பயிற்சியில் மீன்வளத்துறை உதவி ஆய்வாளா் ஏ.பாலமுரளி கலந்துகொண்டனா். பயிற்சிக்கான ஏற்பாடுகளை தலத்தெரு வேளாண் அலுவலா் வி.சுமதி, வட்டார தொழில்நுட்ப மேலாளா் பி.புருஷேத்ராஜ், துணை வட்டார தொழில்நுட்ப மேலாளா் ஆா்.உமாதேவி உள்ளிட்டோா் செய்திருந்தனா். பயிற்சியில் 25 மகளிா் பங்கேற்றனா் என அதில் கூறப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai