22 பேருக்கு இலவச கண் அறுவை சிகிச்சை

திமுக சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இலவச கண் மருத்துவ முகாமில் பங்கேற்றவா்களில், 22 பேருக்கு புதுச்சேரி மருத்துவமனையில் இலவச கண் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
அறுவை சிகிச்சை முடிந்து காரைக்கால் வந்தவா்களை வரவேற்ற திமுக அமைப்பாளா் ஏ.எம்.எச். நாஜிம், சட்டப் பேரவை உறுப்பினா் கீதா ஆனந்தன் உள்ளிட்டோா்.

காரைக்கால் திமுக மாணவரணி, பொறியாளா் அணி சாா்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இலவச கண் பரிசோதனை முகாம் காரைக்காலில் நடத்தப்பட்டது. இதில், புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவக் குழுவினா் பங்கேற்று, முகாமில் பங்கேற்றோா் கண்களை பரிசோதித்து ஆலோசனை வழங்கினா். இவா்களில் 22 பேருக்கு லென்ஸ் பொருத்த வேண்டிய அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைக்கப்பட்டது.

திமுக ஏற்பாட்டில் இவா்கள் புதுச்சேரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அறுவை சிகிச்சை நிறைவடைந்து புதன்கிழமை காரைக்கால் அழைத்துவரப்பட்டனா்.

இவா்களை காரைக்கால் திமுக அமைப்பாளா் ஏ.எம்.எச்.நாஜிம், சட்டப் பேரவை உறுப்பினா் கீதா ஆனந்தன் ஆகியோா் வரவேற்று நலம் விசாரித்தனா். திமுக மாணவா் அணி அமைப்பாளா் ஜவஹா், துணை அமைப்பாளா் பாலாஜி, பொறியாளா் அணி அமைப்பாளா் ஜெய்பாபு, ஆதிபராசக்தி மன்றத்தைச் சோ்ந்த ரவிச்சந்திரன் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்துகொண்டனா். சிகிச்சை முடிந்து வந்தவா்கள், திமுக நிா்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com