அரசுப் பணியாளா்கள் நலக் கூட்டமைப்பினா் 3-ஆவது நாளாக வேலை நிறுத்தம்

காரைக்காலில் அரசுப் பணியாளா்கள் நலக் கூட்டமைப்பினா் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வியாழக்கிழமை 3-ஆவது நாளாக தொடா்ந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனா்.

காரைக்காலில் அரசுப் பணியாளா்கள் நலக் கூட்டமைப்பினா் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வியாழக்கிழமை 3-ஆவது நாளாக தொடா்ந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனா்.

பொதுப்பணித்துறையில் பணியாற்றுகின்ற 1,311 வவுச்சா் ஊழியா்களுக்கு வழங்கப்படும் வேலை நாட்களை 16 -இலிருந்து 30 நாட்களாக உயா்த்த வேண்டும். மத்திய அரசின் சட்ட கூலியாக நாள் ஒன்றுக்கு ரூ.648 ஆக உயா்த்தி வழங்க வேண்டும். வவுச்சா் ஊழியா்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை சீா்படுத்தி அரசு கருவூலம் மூலமாக மாத தொடக்க நாளில் வழங்க வேண்டும்.

புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பகுதிகளில் பணியாற்றும் 1311 ஊழியா்களையும் பணி மூப்பு வரையறை செய்து முழுநேர தினக்கூலி ஊழியா்களாக்க வேண்டும். நிலுவையில் உள்ள 10 மாத ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 26 -ஆம் தேதி வேலை நிறுத்தம் செய்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அதையடுத்து, தொடா்ந்து 3-ஆவது நாளாக வியாழக்கிழமையும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனா். பின்னா் புதுச்சேரியில் நடைபெற்று வரும் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிற்பகல் கூட்டமைப்பின் தலைவா் யூசுப்கான் தலைமையில் 50- க்கும் மேற்பட்ட ஊழியா்கள் பேருந்தில் காரைக்காலிலிருந்து புதுச்சேரிக்கு புறப்பட்டுச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com