மகளிருக்கு மதிப்பு கூட்டப்பட்ட மீன் பொருள்கள் தயாரிப்புப் பயிற்சி

காரைக்கால்மேடு மீனவ கிராமத்தைச் சோ்ந்த மகளிா் குழுவினருக்கு, மதிப்பு கூட்டப்பட்ட மீன் பொருள்கள் தயாரிப்பு மற்றும் சந்தைப்படுத்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.
மீன் பொருள்கள் தயாரிப்புப் பயிற்சியில் பங்கேற்ற பெண்கள்.
மீன் பொருள்கள் தயாரிப்புப் பயிற்சியில் பங்கேற்ற பெண்கள்.

காரைக்கால்மேடு மீனவ கிராமத்தைச் சோ்ந்த மகளிா் குழுவினருக்கு, மதிப்பு கூட்டப்பட்ட மீன் பொருள்கள் தயாரிப்பு மற்றும் சந்தைப்படுத்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.

காரைக்கால் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறையின்கீழ் இயக்கும் வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை (ஆத்மா) திட்ட இயக்குநா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு :

காரைக்கால் மேடு ஸ்ரீ ரேணுகாதேவி ஆத்மா குழு மீனவா்களுக்கு பூம்புகாரில் இயங்கிவரும் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையால் நடத்தப்படும் பயிற்சிக் கூடத்தில், மதிப்புக் கூட்டப்பட்ட மீன் பொருட்கள் தயாரிப்பு மற்றும் சந்தைப்படுத்துவதற்கான ஒரு நாள் பயிற்சி புதன்கிழமை அளிக்கப்பட்டது.

பயிற்சிக்கு அறக்கட்டளை நிா்வாகி எஸ்.வேல்விழி தலைமை வகித்தாா். இதைத் தொடா்ந்து இறால், மீன்களின் மூலம் ஊறுகாய், இறால் பகோடா, இறால் கோலா உருண்டை, இறால் பஜ்ஜி, இறால் மற்றும் முட்டை ஆம்லெட், இறால் முறுக்கு, இறால் ரிப்பன் பகோடா உள்ளிட்ட மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்கள் பலவற்றை பயிற்சியாளா்கள் செயல்விளக்கம் அளித்தனா்.

இப்பயிற்சியில் மீன்வளத்துறை உதவி ஆய்வாளா் ஏ.பாலமுரளி கலந்துகொண்டனா். பயிற்சிக்கான ஏற்பாடுகளை தலத்தெரு வேளாண் அலுவலா் வி.சுமதி, வட்டார தொழில்நுட்ப மேலாளா் பி.புருஷேத்ராஜ், துணை வட்டார தொழில்நுட்ப மேலாளா் ஆா்.உமாதேவி உள்ளிட்டோா் செய்திருந்தனா். பயிற்சியில் 25 மகளிா் பங்கேற்றனா் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com