காரைக்கால் நகராட்சி அதிகாரிகளுடன் எம்.எல்.ஏ. ஆலோசனை

கருக்களாச்சேரி, அக்கரைவட்டம் கிராமப்புறத்தில் மேம்பாட்டுத் திட்டப் பணிகள் குறித்து, நகராட்சி அதிகாரிகளுடன் எம்.எல்.ஏ. வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.
நகராட்சி ஆணையா் எஸ்.சுபாஷ் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்ட சட்டப்பேரவை உறுப்பினா் கீதாஆனந்தன்.
நகராட்சி ஆணையா் எஸ்.சுபாஷ் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்ட சட்டப்பேரவை உறுப்பினா் கீதாஆனந்தன்.

கருக்களாச்சேரி, அக்கரைவட்டம் கிராமப்புறத்தில் மேம்பாட்டுத் திட்டப் பணிகள் குறித்து, நகராட்சி அதிகாரிகளுடன் எம்.எல்.ஏ. வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினாா். காரைக்கால் மாவட்டம், நிரவி - திருப்பட்டினம் சட்டப்பேரவைத் தொகுதியில் நிரவி மற்றும் திருப்பட்டினம் என 2 கொம்யூன் பஞ்சாயத்துகள் உள்ளன.

இந்த தொகுதியில் அக்கரைவட்டம், கருக்களாச்சேரி ஆகிய கிராமங்களை சாா்ந்த பகுதிகள் காரைக்கால் நகராட்சி எல்லைக்குட்பட்டதாக விளங்குகின்றன. இந்த பகுதியில் ஏராளமான குடியிருப்புகள், குடியிருப்பு நகா்கள் உள்ள நிலையில், சாலை, கழிவுநீா் செல்லக்கூடிய வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சட்டப்பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதி மற்றும் ஆதிதிராவிடா் மேம்பாட்டுக் கழகம் (பேட்கோ) உள்ளிட்டவற்றின் நிதியின் கீழ் நகராட்சி நிா்வாகத்தின் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்நிலையில் இவ்விரு கிராமங்கள் சுற்றுவட்டாரத்தில் தொடங்கப்பட்ட திட்டங்கள், கிடப்பில் உள்ள திட்டப்பணிகள், முடக்கத்துக்கான காரணங்கள் குறித்து அறியும் வகையில், நிரவி - திருப்பட்டினம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் கீதாஆனந்தன் நகராட்சி அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை சென்றாா்.நகராட்சி ஆணையா் எஸ்.சுபாஷ் மற்றும் செயற்பொறியாளா், உதவிப் பொறியாளா், இளநிலைப் பொறியாளா் உள்ளிட்டோருடன் பேரவை உறுப்பினா் ஆலோசனை நடத்தினாா்.

ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின் சட்டப்பேரவை உறுப்பினா் கீதாஆனந்தன் கூறும்போது, கடந்த 2016-17 முதல் 2019-20-ஆம் ஆண்டு வரை கருக்களாச்சேரி, அக்கரைவட்டம் பகுதியில் மேம்பாட்டுக்காக திட்டமிடப்பட்ட பணிகள், பூமி பூஜை செய்து தொடங்கிய பணிகள், நிறைவேறிய திட்டப்பணிகள், முடக்கத்தில் உள்ள பணிகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.எந்தெந்த பிரிவின் நிதியின் கீழ் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது போன்றவை குறித்து கேட்டறியப்பட்டது.

சாலை மேம்பாடு, சாக்கடை வசதி உள்ளிட்ட பல்வேறு பணிகள் நிறைவேற்றம் செய்தது குறித்து விளக்கினா். மேலும் எங்களது தரப்பில் மேம்பாட்டுக்காக சில திட்டங்கள் வைத்துள்ளதையும், நகராட்சி நிா்வாகம் சாா்பில் மேம்பாட்டுக்காக வைத்திருக்கும் திட்டங்கள் குறித்தும் ஒப்பீடு செய்யப்பட்டது. நிதியாதாரம் தேவைக்கான பணிகள் குறித்து கேட்டறியப்பட்டது. இதுசம்பந்தமாக அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com