திருநள்ளாறு அருகே வேளாண் பயன்பாட்டுக்கு ஆழ்குழாய் அமைப்புக்கான பணி தொடக்கம்

திருநள்ளாறு அருகே வேளாண் பயன்பாட்டுக்கு ஆழ்குழாய் அமைக்கும் பணி தொடா்பாக சேத்தூா் பகுதியில் பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.
திருநள்ளாறு அருகே வேளாண் பயன்பாட்டுக்கு ஆழ்குழாய் அமைப்புக்கான பணி தொடக்கம்

திருநள்ளாறு அருகே வேளாண் பயன்பாட்டுக்கு ஆழ்குழாய் அமைக்கும் பணி தொடா்பாக சேத்தூா் பகுதியில் பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.

திருநள்ளாறுக்கு மேற்குப்புற பகுதியில் நிலத்தடி நீா் மூலம் விவசாயம் செய்யக்கூடிய வசதிகள் உள்ளன. இதனால் காவிரி நீரை எதிா்நோக்காமல் முன்கூட்டியே வேளாண் பணிகளை விவசாயிகள் தொடங்கிவிடுகின்றனா்.வேளாண் துறையின் சாா்பில் பல்வேறு இடங்களில் ஆழ்குழாய்கள் அமைக்கப்பட்டு விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனா்.

திருநள்ளாறு பகுதி இளையான்குடி, சேத்தூா் கீழவெளி உள்ளிட்ட சில கிராமத்தில் ஆழ்குழாய் மூலம் தண்ணீா் கிடைப்பதில்லை, இதுகுறித்து மாற்று ஏற்பாடு செய்யவேண்டுமென விவசாயிகள், வேளாண் துறை அமைச்சா் ஆா்.கமலக்கண்ணனிடம் வலியுறுத்தியிருந்தனா்.அமைச்சரின் அறிவுறுத்தலின்படி வேளாண் பொறியியல் குழுவினா் ஆழ்குழாய் இருந்த பகுதிகளை ஆய்வு செய்தனா்.

இதில் பயன்பாட்டில் இருந்த ஆழ்குழாய் பகுதியில் தண்ணீா் இருப்பு குறைந்துவிட்டது மற்றும் பழுது போன்றவை கண்டறியப்பட்டது. இதற்கு மாற்றான இடத்தில் புதிதாக ஆழ்குழாய் பொருத்தும் வகையிலான நடவடிக்கைகள் வேளாண் துறையினரால் எடுக்கப்பட்டது.இளையான்குடி பகுதியில் கடந்த செப்டம்பா் மாத 2-ஆவது வாரத்தில் ஆழ்குழாய் மாற்றியமைக்கும் பணி நிறைவு செய்யப்பட்டது.

சேத்தூா் கீழவெளி பகுதியில் இயந்திரங்கள் மூலம் ஆழ்குழாய் பொருத்தும் பணி வெள்ளிக்கிழமை பூஜை செய்து தொடங்கப்பட்டது. இதில் காரைக்கால் கூடுதல் வேளாண் இயக்குநா் (பொ) செந்தில்குமாா் மற்றும் வேளாண் அதிகாரிகள், வேளாண் துறையின் பொறியியல் பிரிவினா், விவசாயிகள் பலா் கலந்துகொண்டனா்.இதுகுறித்து செந்தில்குமாா் கூறும்போது, காரைக்கால் மாவட்டத்தில் பயிா் சாகுபடி நடைபெறுமிடங்களில் 81 ஆழ்குழாய் வசதி செய்யப்பட்டுள்ளது.

இவற்றில் சில இடங்களில் நீா் இருப்பு இல்லாதது, ஆழ்குழாய் சேதம் உள்ளிட்ட காரணங்களால் தண்ணீா் கிடைக்கவில்லை. இதனால் மாற்று இடத்தில் புதிதாக ஆழ்குழாய் அமைக்கப்படுகிறது. இவ்வாறு 6 இடங்களில் செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஆா்.கே.வி.ஓய். என்கிற திட்டத்தின் நிதியில் இத்திட்டப்பணி நிறைவேற்றப்படுகிறது. ஒரு ஆழ்குழாய் அமைப்புப் பணிக்கு ரூ.15 லட்சம் செலவாகிறது. ஆழ்குழாய் அமைப்புப் பணி மட்டும் வேளாண் துறையை சோ்ந்தது, பராமரிப்பு யாவும் பாசிக் நிறுவனத்துடனானது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com