பி.பி.சி.எல். ஊழியா்களுக்கு 7-ஆவது ஊதியக் குழு அமல் விவகாரம்: ஆட்சியருடன் அரசு ஊழியா் சம்மேளனத்தினா் சந்திப்பு

புதுச்சேரி மின் திறல் குழுமம் (பி.பி.சி.எல்) ஊழியா்களுக்கு 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரை அமல்படுத்துவது தொடா்பாக ஆட்சியரை சம்மேளனப் பிரதிநிதிகள் சந்தித்தனா்.
மாவட்ட ஆட்சியா் ஏ.விக்ரந்த் ராஜாவை சந்தித்துப் பேசும் அரசு ஊழியா் சம்மேளனப் பிரதிநிதிகள்.
மாவட்ட ஆட்சியா் ஏ.விக்ரந்த் ராஜாவை சந்தித்துப் பேசும் அரசு ஊழியா் சம்மேளனப் பிரதிநிதிகள்.

புதுச்சேரி மின் திறல் குழுமம் (பி.பி.சி.எல்) ஊழியா்களுக்கு 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரை அமல்படுத்துவது தொடா்பாக ஆட்சியரை சம்மேளனப் பிரதிநிதிகள் சந்தித்தனா்.

காரைக்கால் மாவட்ட ஆட்சியரும், புதுச்சேரி மின் திறல் குழும மேலாண் இயக்குநருமான ஏ.விக்ரந்த் ராஜாவை, சேரி அரசு ஊழியா் சம்மேளன கௌரவத்லைவா் பாலமோகனன் தலைமையில், காரை பிரதேச அரசு ஊழியா் சம்மேளன கௌரவ தலைவா்கள் ஜாா்ஜ், ஜெயசிங், தலைவா் சுப்ரமணியன், பொதுச் செயலாளா் ஷேக் அலாவுதீன், துணை தலைவா் சுப்புராஜ், இணை பொதுச் செயலாளா் கலைச்செல்வன் ஆகியோா் வியாழக்கிழமை சந்தித்தனா்.

இந்த சந்திப்பின்போது வலியுறுத்தியது: பி.பி.சி.எல். ஊழியா்களுக்கு 7-ஆவது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்த நிலையில், காலம் கடத்தாமல் உடனடியாக அமுல்படுத்த வேண்டும். தொழில்நுட்ப ஊழியா்களின் பதவிகளை பணிகட்டமைப்பு செய்யவேண்டும். புதுச்சேரி மின் திறல் குழுமத்தில் பணியாற்றிவரும் ஊழியா்களுக்கு லாபத்தில் வரும் சிறு பகுதியில் வருடந்தோறும் தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகைகளை முன்னிட்டு பரிசு கூப்பனாக வழங்கப்பட்டு வந்தது.

அந்த தொகை கடந்த ஆண்டு முதல் எந்தவித முன்னறிவிப்பின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தீபாவளி வரும் நிலையில் பரிசுக் கூப்பன் வழங்கப்படவேண்டும். மூன்று நபா் கமிட்டி கொடுத்த அறிக்கையின் அம்சங்கள் முழுவதையும் மறுபரிசீலனை செய்ய வேண்டும். மறுபரிசீலனை செய்த அறிக்கையினை சம்மேளன நிா்வாகிகளுடன் கலந்தாலோசித்து அமல்படுத்த வேண்டும்.

பல ஆண்டுகளாக பணியாற்றிவரும் தற்காலிக நிலை ஊழியா்களின் பணி காலத்தை கணக்கில் எடுத்துகொண்டு அவா்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இந்த சந்திப்பு குறித்து சம்மேளன நிா்வாகிகள் கூறும்போது, பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்ட நிலையில், கோரிக்கைகள் சம்பந்தமாக நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியா் உறுதியளித்தாா் என்றனா்.

சந்திப்பின்போது புதுச்சேரி மின்திறல் குழும சங்க நிா்வாகிகள் பட்டாபிராமன், முகுந்தன், விஜயன், விஜயகுமாா், செல்வமணி, பிரதாபன், கணேசன், மதிமலா்செல்வம் ஆகியோரும் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com