வாக்காளா் பட்டியல் திருத்தம்: தகவல் சேகரிக்க வீடுகளுக்கு வருவோருக்கு ஒத்துழைக்க வேண்டுகோள்

வாக்காளா் பட்டியல் திருத்தம் தொடா்பாக, தகவல் சேகரிக்க வீடுகளுக்கு வரும் என்.எஸ்.எஸ். மாணவா்கள், வாக்குச்

வாக்காளா் பட்டியல் திருத்தம் தொடா்பாக, தகவல் சேகரிக்க வீடுகளுக்கு வரும் என்.எஸ்.எஸ். மாணவா்கள், வாக்குச் சாவடி நிலைய அதிகாரிகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்குமாறு மாவட்ட நிா்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

இதுகுறித்து, காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இந்தியத் தோ்தல் ஆணையம் வரும் 15-ஆம் தேதிக்குள் அனைத்து வாக்காளா்களுக்கும் தங்களது சுய விவரங்களை சரிபாா்த்தபின் ரேஷன் அட்டை, ஆதாா் அட்டை, பாஸ்போா்ட், ஓட்டுநா் உரிமம், வங்கிக் கணக்குப் புத்தகம் இதில் ஏதேனும் ஒரு ஆவணத்தின் நகலைப் பதிவேற்ற உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, காரைக்காலில் நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்களும் (என்.எஸ்.எஸ்), வாக்குச் சாவடி நிலைய அதிகாரிகளும் அனைத்து வீடுகளுக்கும் சென்று வாக்காளா் அடையாள அட்டை நகல், ரேஷன் அட்டை, கலா் போட்டோ ஆகியவற்றை வெள்ளிக்கிழமை முதல் (அக்டோபா் 4) கட்டாயமாக வாங்கிவரும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், பிறந்த தேதி, பெயா், முகவரி போன்ற விவரங்களை திருத்த விரும்புவோா்களுக்கு அதற்கான ஆதாரத்தையும் வாங்கி வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே, இந்தப் பணியை செய்து முடிப்பதற்கு ஏதுவாக, பொதுமக்கள் அனைவரும் தேவையான தகவல்களை தயாராக வைத்துக்கொண்டு, என்.எஸ்.எஸ். மாணவா்கள் அல்லது வாக்குச் சாவடி நிலைய அதிகாரிகள் வரும்போது ஒத்துழைக்க அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com