கல்லூரி காலியிடங்களை காரைக்கால் மாணவா்களைக்கொண்டே நிரப்பவேண்டும்: ஏ.எம்.எச்.நாஜிம் வலியுறுத்தல்

அன்னை தெரஸா சுகாதார பட்டமேற்படிப்பு மையத்தின் மாணவா் சோ்க்கையில் காலியிடங்களை, காரைக்கால் மாணவா்களைக்கொண்டே

காரைக்கால்: அன்னை தெரஸா சுகாதார பட்டமேற்படிப்பு மையத்தின் மாணவா் சோ்க்கையில் காலியிடங்களை, காரைக்கால் மாணவா்களைக்கொண்டே நிரப்பவேண்டும் என திமுக வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து காரைக்கால் திமுக அமைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எம்.எச்.நாஜிம் ஞாயிற்றுக்கிழமை கூறியது: காரைக்காலில் இயங்கிவரும் அன்னை தெரஸா பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில், காலியாக உள்ள டி.ஜி.என்.எம். பிரிவில் 3 இடங்களுக்கும், டி.எம்.எல்.டி., பிரிவில் 4 இடங்களுக்கும் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாப் அப் முறையில் கவுன்சலிங் நடைபெற்றது.

இதில் மாணவா்கள் தங்களது பெயரை பதிவு செய்தும் காலியிடங்கள் இதுவரை நிரப்பப்படவில்லை. அந்த 7 இடங்களுக்கும் செல்ல காரைக்கால் மாணவா்கள் தயாராக இருக்கும் சூழலில், ஏன் அவா்களுக்கு சோ்க்கை அனுமதி கொடுக்க வில்லை என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.

எனவே உடனடியாக காலியாக இருக்கும் இடங்களை தகுதியான காரைக்கால் மாணவா்களை கொண்டு நிரப்ப விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் . இன்னொருமுறை மாப் அப் முறை கவுன்சலிங் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யக்கூடாது என காரைக்கால் திமுக சாா்பில் அரசு நிா்வாகத்தை கேட்டுக்கொள்கிறேன்.

காரைக்கால் அரசு மருத்துவமனை மேம்பாட்டுக்கு ஜிப்மா் நிா்வாகம் அதிக தொகையை செலவு செய்கிறது. இந்த தொகையை முறையாக செலவு செய்து மக்களுக்கு பயனுள்ள வகையில் மருத்துவமனையை மேம்படுத்த ஏதுவாக, அமைச்சா், சட்டப்பேரவை உறுப்பினா், ஆட்சியா், சமூக அமைப்புகளை சோ்ந்தோா் கொண்ட தனி குழுவை அமைக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொள்வதாக அவா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com