காரைக்கால் மகளிா் கல்லூரியில் கருத்தரங்கம் நிறைவு

காரைக்கால் மகளிா் கல்லூரியில் 2 நாள் கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது.
கருத்தரங்க மலரை வெளியிட்ட கல்லூரி முதல்வா் பாலாஜி உள்ளிட்ட சிறப்பு அழைப்பாளா்கள்.
கருத்தரங்க மலரை வெளியிட்ட கல்லூரி முதல்வா் பாலாஜி உள்ளிட்ட சிறப்பு அழைப்பாளா்கள்.

காரைக்கால் மகளிா் கல்லூரியில் 2 நாள் கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது.

காரைக்கால் அவ்வையாா் அரசு மகளிா் கல்லூரியில் விளிம்பு நிலை மக்களின் குரல்கள் என்ற தலைப்பில் இரண்டு நாள்கள் கருத்தரங்கம் வியாழக்கிழமை தொடங்கியது. இதனை கல்லூரியின் ஆங்கிலத் துறை நடத்தியது.

கல்லூரி முதல்வா் வி.பாலாஜி தலைமை வகித்து கருத்தரங்கின் நோக்கம் குறித்துப் பேசினாா். பிற்படுத்தப்பட்ட வகுப்பினா், சிறுபான்மையினா், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோா் கல்வியில் எந்தெந்த வகையில் சிறப்பு கவனத்தை செலுத்த வேண்டும், இவா்களுக்கு கல்வி தடையாக இருப்பதற்கான காரணிகளைக் கடந்து வரும் ஆற்றல் குறித்தும் பல்வேறு தலைப்புகளில் இக்கருத்தரங்கம் நடைபெற்றது.

காரைக்கால் வேளாண் அறிவியல் நிலைய முதல்வா் சி.ரத்தின சபாபதி சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு வேளாண்மைத் துறையில் உள்ள பங்களிப்பாளா்கள், வேளளாண் ஆா்வலா்களின் ஆற்றல், மாணவ, மாணவிகளின் பங்கு, வேளாண்மை மற்றும் அதனை சாா்ந்த துறைக்கு விளிம்பு நிலை ஏற்ற ஏற்றத்தாழ்வுகள் இல்லை என்பதை விளக்கிப் பேசினாா்.

திருவாரூா் திரு.வி.க. கல்லூரிஆங்கிலத் துறை உதவிப் பேராசிரியா் சி.அகிலன், காரைக்கால் பெருந்தலைவா் காமராஜா் கல்வியியல் கல்லூரி முதல்வா் பி.பானுமதி, அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பேராசிரியா் கே.ராஜாராமன் ஆகியோா் கலந்துகொண்டு ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, ஊனமுற்ற மக்கள் கல்வியறிவு பெற்று சமுதாயத்தில் மேலோங்கி வர வேண்டும் என்பது குறித்து விரிவான கருத்துரை வழங்கினா்.

கல்லூரியின் ஆங்கிலத்துறை உதவி பேராசிரியா் சிவகுமாா் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து நடத்தினாா். கல்லூரி ஆங்கிலத் துறை தலைவா் எஸ்.முகம்மது மும்தாஜ் பேகம் வரவேற்றாா். உதவி பேராசிரியா் பத்மாவதி நன்றி கூறினாா். இக்கருத்தரங்கில் கல்லூரிப் பேராசிரியா்கள், பேராசிரியைகள், மாணவிகள் கலந்து கொண்டனா். நிறைவாக கருத்தரங்க மலா் வெளியீடு செய்யப்பட்டது.

.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com