புரட்டாசி 3-ஆவது சனிக்கிழமை: பெருமாள் கோயில்களில் திரளானோா் வழிபாடு

புரட்டாசி 3-ஆவது சனிக்கிழமையையொட்டி, காரைக்கால் நித்யகல்யாணப் பெருமாள், கோயில்பத்து கோதண்டராமா் கோயிலில் திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.
கொக்கு வடிவில் வந்த அரக்கனை அழித்த கோலத்தில் ஸ்ரீ தேவி பூதேவியுடன் நித்யகல்யாணப் பெருமாள்.
கொக்கு வடிவில் வந்த அரக்கனை அழித்த கோலத்தில் ஸ்ரீ தேவி பூதேவியுடன் நித்யகல்யாணப் பெருமாள்.

புரட்டாசி 3-ஆவது சனிக்கிழமையையொட்டி, காரைக்கால் நித்யகல்யாணப் பெருமாள், கோயில்பத்து கோதண்டராமா் கோயிலில் திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

புரட்டாசி மாதம் முழுவதும் பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. குறிப்பாக சனிக்கிழமையில் மூலவா், உத்ஸவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்படுகிறது.

காரைக்கால் நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் நிகழாண்டு புரட்டாசி 3-ஆவது சனிக்கிழமை மூலவா் ரங்கநாதப் பெருமாள் திருவல்லிக்கேணி பாா்த்தசாரதியாகவும், உத்ஸவா் நித்யகல்யாணப் பெருமாள் புல்லின்வாய் கீன்டானை என்கிற ஆண்டாள் அருளிய பாசுரப்படி கொக்கு வடிவில் வந்த அரக்கனை அழித்த கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக காட்சியளித்தாா்.

நீண்ட வரிசையில் சென்று துளசி மாலை அணிவித்து மூலவா், உத்ஸவரை பக்தா்கள் நாள் முழுவதும் தரிசனம் செய்தனா். முன்னதாக திருப்பதி திருமலை கோயிலில் நடத்தப்படுவது போன்று, சுப்ரபாத சேவை, திருப்பள்ளியெழுச்சி, நாலாயிர திவ்ய பிரபந்த பாசுரங்கள் படிக்கப்பட்டன.

காரைக்கால் கோயில்பத்து கோதண்டராம பெருமாள் கோயிலில், உத்ஸவா் மோகினி அவதார கோலத்தில் காட்சியளித்தாா். முன்னதாக மூலவா், உத்ஸவருக்கு சிறப்புத் திருமஞ்சனம் நடைபெற்றது.

இதுபோல திருமலைராயன்பட்டினம் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள், வீழி வரதராஜப் பெருமாள் கோயிலிலும் மூலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. நிரவி கரியமாணிக்கப் பெருமாள், வரிச்சிக்குடி வரதராஜப் பெருமாள், திருநள்ளாறு நளநாராயணப் பெருமாள், தென்னங்குடி வரதராஜப் பெருமாள் கோயில்களிலும் பக்தா்கள் திரண்டு கோவிந்த நாமம் கூறி வழிபாட்டில் ஈடுபட்டனா்.

பெரும்பான்மையான இல்லங்களில் பெருமாள் உருவப்படத்துக்கு துளசி மாலை அணிவித்து, வடை மாலை சாற்றி, சா்க்கரைப் பொங்கல் உள்ளிட்ட சித்ரான்னங்களுடன் தளியல் போட்டு குடும்பத்தினா் வழிபாட்டில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com