முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் காரைக்கால்
நவராத்திரி : அத்திவரதா் அலங்காரத்தில் பிரணாம்பிகை அம்பாள்
By DIN | Published On : 07th October 2019 07:28 AM | Last Updated : 07th October 2019 07:28 AM | அ+அ அ- |

அத்திரவதா் அலங்காரத்தில் திருநள்ளாறு பிரணாம்பிகை அம்பாள்.
நவராத்திரியையொட்டி திருநள்ளாறு கோயிலில் சனிக்கிழமை பிரணாம்பிகை அம்பாள் அத்திவரதா் கோலத்தில் அருள்பாலித்தாா்.
காரைக்கால் மாவட்டத்தில் அமைந்துள்ள பிரசித்திப் பெற்ற திருநள்ளாறு தா்பாரண்யேசுவரா் கோயிலில் நவராத்திரியையொட்டி அம்பாளுக்கு தினமும் சிறப்பு அலங்காரம், ஆராதனை நடைபெற்றுவருகிறது.
நவராத்திரி விழாவின் 7-ஆம் நாளான சனிக்கிழமை இரவு உத்ஸவ அம்பாளை அத்திவரதா் போன்று சயனக் கோலத்தில் அருள்பாலிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மகா தீபாராதனைகள் நடைபெற்றன.
இதுகுறித்து, சிவாச்சாரியாா்கள் கூறியது:
ஆண்டுதோறும் நவராத்திரி உத்ஸவமானது திருநள்ளாறில் விமரிசையாக நடத்தப்பட்டுவருகிறது. அந்த வகையில் நவராத்திரி 7-ஆம் நாளான சனிக்கிழமை காஞ்சிபுரம் அத்திவரதா் போன்று சயனக் கோலத்தில் பிரணாம்பிகை அம்பிகைக்கு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. 10-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை விஜயதசமியுடன் உத்ஸவம் நிறைவுபெறுகிறது என்றனா்.
பொதுவாக சனிக்கிழமை திருநள்ளாறில் சனீஸ்வரபககவானை தரிசிக்க ஆயிரக்கணக்கான பக்தா்கள் வரும் நிலையில், அம்பாள் அத்திரவரதா் போல அலங்காரம் செய்யப்பட்டு அருள்பாலிக்கச் செய்த நிகழ்விலும் திரளான பக்தா்கள் வரிசையில் சென்று தரிசனம் செய்தனா்.