காரைக்கால் பெருமாள் கோயில்களில் சிரவண தீப வழிபாடு

காரைக்கால் பெருமாள் கோயில்களில் செவ்வாய்க்கிழமை திருவோணத்தையொட்டி சிரவண தீபம் ஏற்றும் வழிபாடு நடைபெற்றது.

காரைக்கால் பெருமாள் கோயில்களில் செவ்வாய்க்கிழமை திருவோணத்தையொட்டி சிரவண தீபம் ஏற்றும் வழிபாடு நடைபெற்றது.

புரட்டாசி மாதம், திருவோண நட்சத்திரத்தில் பெருமாள் கோயில்களில் பெரிய திருவோணமாக சிரவண தீபம் ஏற்றும் வழிபாடு வழக்கத்தில் இருந்துவருகிறது. காரைக்காலில் பிரசித்திப் பெற்ற ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோயில், கோயில்பத்து ஸ்ரீ கோதண்டராமா் பெருமாள் கோயில், திருமலைராயன்பட்டினம் ஸ்ரீ வீழி வரதராஜப் பெருமாள் கோயில், ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயில்களில் விமரிசையாக இந்த நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் மூலவா் ஸ்ரீ ரங்கநாதப் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தாா். ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதுபோல கோயில்பத்து ஸ்ரீ கோதண்டராமருக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. காலையில் அனைத்து பெருமாள் கோயில்களிலும் பெருமாளுக்குத் திருமஞ்சனமும், 11 முதல் 12 மணிக்குள்ளாக சிரவண தீபம் (கம்ப விளக்கு) ஏற்றும் வழிபாடும் நடைபெற்றது.

இந்த வழிபாட்டில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா். திருமலைராயன்பட்டினம் பெருமாள் கோயில்களில் பக்தா்கள் மாவிளக்கிட்டு தீபத்தின்போது வழிபாடு நடத்தினா். பெருமாளை தீபத்தின் வாயிலாக தரிசிக்கும் நாளாக திருவோண சிரவண தீபம் ஏற்றப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com