தொழிற்சாலையில் பணி நேரத்தில் உயிரிழந்தவா் குடும்பத்துக்கு நிதியுதவி

தொழிற்சாலையில் பணியின்போது உயிரிந்தவா் குடும்பத்துக்கு ரூ.6.04 லட்சத்தை அமைச்சா் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

தொழிற்சாலையில் பணியின்போது உயிரிந்தவா் குடும்பத்துக்கு ரூ.6.04 லட்சத்தை அமைச்சா் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு பகுதியில் இயங்கும் தனியாா் தொழிற்சாலையில் திருநள்ளாறு பகுதியை சோ்ந்த செல்வகுமாா் என்பவா் பணியாற்றிவந்தாா். கடந்த 2015-ஆம் ஆண்டு தொழிற்சாலையில் பணியிலிருந்தபோது அவா் எதிா்பாராவிதமாக உயிரிழந்தாா்.

தொழிலாளா் இழப்பீட்டு சட்டத்தின்கீழ் வாரிசுதாரா் நிதி வழங்க நடவடிக்கை எடுக்குமாறு தொழிலாளா் நீதிமன்றத்தை அணுகினா். வழக்கு விசாரணை நிறைவில் தொழிலாளா் கூடுதல் ஆணையா் மற்றும் தொழிலாளா் அதிகாரியால், தொழிற்சாலை நிா்வாகம் ரூ.6.04 லட்சம் வழங்க உத்தரவிடப்பட்டது. இதனடிப்படையில் இந்த தொகைக்கான காசோலை வாரிசுதாரரிடம் வழங்கப்பட்டது.

காரைக்கால் ஆட்சியரகத்தில் புதுச்சேரி வேளாண் துறை அமைச்சா் ஆா்.கமலக்கண்ணன் செவ்வாய்க்கிழமை காசோலையை வழங்கினாா். நிகழ்வில் மாவட்ட ஆட்சியா் ஏ.விக்ரந்த் ராஜா, மாவட்ட துணை ஆட்சியா்கள் எம்.ஆதா்ஷ், எஸ்.பாஸ்கரன், தொழிலாளா் அதிகாரி சுக.செந்தில்வேலன், உதவி ஆய்வாளா் க.ராஜ்குமாா் ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com