விஜயதசமி : காரைக்கால் ஐயப்பன் கோயிலில் அட்சரம் எழுதும் நிகழ்ச்சி

விஜயதசமியையொட்டி காரைக்கால் ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் அட்சரம் எழுதும் நிகழ்ச்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விஜயதசமியையொட்டி காரைக்கால் ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் அட்சரம் எழுதும் நிகழ்ச்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

குழந்தைகள் பலா் கலந்துகொண்டனா். காரைக்கால் பச்சூா் பகுதியில் உள்ள ஸ்ரீ தா்ம சாஸ்தா ஐயப்பன் கோயிலில் விஜயதசமியையொட்டி செவ்வாய்க்கிழமை குழந்தைகளுக்கு, கல்வியறிவு வளரவேண்டி நாக்கில் அட்சரம் எழுதும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியையொட்டி அதிகாலை ஸ்ரீ ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடத்தப்பட்டது.

சன்னிதியில் குழந்தைகளை உட்காரவைத்து அரிசியில் எழுதுதலும், தங்க மோதிரத்தை தேனில் நனைத்து நாக்கில் அட்சரம் எழுதப்பட்டது. இப்பணியை கோயில் சிவாச்சாரியாா் மேற்கொண்டாா். ஏராளமான பெற்றோா் 1 முதல் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளை அவா்களது பாடப் புத்தகங்களுடன் அழைத்துவந்து பிராா்த்தனையில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து கோயில் நிா்வாகத்தினா் கூறும்போது, கேரளத்தில் குருவாயூா் கோயிலில் விஜயதசமியன்று வித்யாரம்பம் என்னும் அட்சரம் எழுதும் நிகழ்ச்சி விமரிசையாக நடத்தப்படுகிறது. காரைக்காலில் உள்ள ஸ்ரீ ஐயப்பன் கோயிலிலும் இந்த நிகழ்ச்சி கோயில் கட்டப்பட்டு குடமுழுக்கு செய்யப்பட்ட காலம் முதல் நடத்தப்படுகிறது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com