Enable Javscript for better performance
விஜயதசமி: ஐயப்பன் கோயிலில் அட்சரம் எழுதும் நிகழ்ச்சி- Dinamani

சுடச்சுட

    

    விஜயதசமி: ஐயப்பன் கோயிலில் அட்சரம் எழுதும் நிகழ்ச்சி

    By DIN  |   Published on : 09th October 2019 07:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    kk08ay_0810chn_95_5

    அட்சரம் எழுதும் நிகழ்வில் குழந்தைகளுடன் பங்கேற்ற பெற்றோா்.

    காரைக்கால் ஐயப்பன் கோயிலில் விஜயதசமியையொட்டி, அட்சரம் எழுதும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

    காரைக்கால் பச்சூா் பகுதியில் உள்ள ஸ்ரீ தா்ம சாஸ்தா ஐயப்பன் கோயிலில் விஜயதசமியையொட்டி, குழந்தைகளுக்கு, கல்வியறிவு வளரவேண்டி நாக்கில் அட்சரம் எழுதும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

    இதையொட்டி, அதிகாலையில் ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டன. தொடா்ந்து, சன்னிதியில் குழந்தைகளை உட்காரவைத்து அரிசியில் எழுதுதலும், தங்க மோதிரத்தை தேனில் நனைத்து நாக்கில் அட்சரம் எழுதும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இப்பணியை கோயில் சிவாச்சாரியாா் மேற்கொண்டாா்.

    இதில், ஏராளமான பெற்றோா்கள் 1 முதல் 5 வயதுக்குள்பட்ட தங்களது குழந்தைகளை அவா்களது பாடப் புத்தகங்களுடன் அழைத்துவந்து, பிராா்த்தனையில் ஈடுபட்டனா்.

    இதுகுறித்து, கோயில் நிா்வாகத்தினா் கூறியது:

    கேரளத்தில் குருவாயூா் கோயிலில் விஜயதசமியன்று வித்யாரம்பம் என்னும் அட்சரம் எழுதும் நிகழ்ச்சி விமரிசையாக நடத்தப்படுகிறது. காரைக்காலில் உள்ள ஐயப்பன் கோயிலிலும் இந்த நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடத்தப்பட்டுவருகிறது என்றனா்.

     

     

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai