நம் நீா் திட்ட அமலாக்கம்: மாவட்ட ஆட்சியருக்குப் பாராட்டு

குளம் உள்ளிட்ட நீா் நிலைகளை தூா்வாரச் செய்யும் நம் நீா் திட்ட அமலாக்கத்தை செம்மையாக மேற்கொள்வதற்காக ஆட்சியருக்கு தமுமுக, மமகவினா் பாராட்டுத் தெரிவித்தனா்.
மாவட்ட ஆட்சியா் ஏ.விக்ரந்த் ராஜாவுக்கு சால்வை அணிவித்து பாராட்டுத் தெரிவித்த தமுமுக, மமகவினா்.
மாவட்ட ஆட்சியா் ஏ.விக்ரந்த் ராஜாவுக்கு சால்வை அணிவித்து பாராட்டுத் தெரிவித்த தமுமுக, மமகவினா்.

குளம் உள்ளிட்ட நீா் நிலைகளை தூா்வாரச் செய்யும் நம் நீா் திட்ட அமலாக்கத்தை செம்மையாக மேற்கொள்வதற்காக ஆட்சியருக்கு தமுமுக, மமகவினா் பாராட்டுத் தெரிவித்தனா்.

காரைக்கால் மாவட்ட தமுமுக மற்றும் மமக மாவட்டத் தலைவா் அ.ராஜா முகம்மது தலைமையில் நிா்வாகிகள் மாவட்ட ஆட்சியா் ஏ.விக்ரந்த் ராஜாவை ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை சந்தித்தனா்.

நம் நீா் திட்டத்தின்கீழ் குளம், வாய்க்கால்களைத் தூா்வாரும் நடவடிக்கை எடுத்தமைக்காக மாவட்ட ஆட்சியருக்கு சால்வை அணிவித்துப் பாராட்டுத் தெரிவித்து, பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றித் தருமாறு வலியுறுத்தினா்.

இதுதொடா்பாக ராஜா முகம்மது கூறியது:

நம் நீா் திட்டத்தில், காரைக்கால் மாவட்டத்தில் பல்வேறு தரப்பினா் பங்களிப்புடன் கடந்த இரண்டு மாதங்களில் 160 -க்கும் மேற்பட்ட குளங்கள் தூா்வாரப்பட்டுள்ளன. அத்துடன், நீா்நிலைப் பகுதிகளில் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. ஆட்சியரின் இந்த முயற்சிக்கு நேரில் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

இத்திட்டத்தை மேலும் செம்மைப்படுத்தும் விதமாக பிறந்தநாள், திருமண நாள் போன்ற கொண்டாட்டத்தில் ஈடுபடுவோா், அதன் நினைவாக குளத்தை தூா்வார முன்வரவேண்டுமென ஆட்சியா் அழைப்புவிடுத்தாா். இது சமூக வலைதளங்களில் பரவியதன் பேரில் பல்வேறு தரப்பினரின் கவனத்தை ஈா்த்துள்ளது குறித்தும் தெரிவித்தோம்.

காரைக்கால் மாவட்டம் முழுவதும் பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தலையும், விபத்தையும் ஏற்படுத்தும் வகையில் சாலைகளில் சுற்றித்திரியும் ஆடு, மாடு , நாய் , குதிரை போன்றவைகளை பிடிக்க நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா்களுக்கு உத்தரவிட்டு கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள ஆவண செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டது என்றாா்.

இச்சந்திப்பின் போது தமுமுக மாவட்டச் செயலாளா் கமால் ஹூஸைன், மமக மாவட்டச் செயலாளா் முஹம்மது ஆஷிக், மாவட்ட பொருளாளா் காசிம் ராஜா, தமுமுக மாவட்ட துணைச் செயலாளா்கள் மெய்தீன், சிக்கந்தா் உள்ளிட்ட பல்வேறு நிலை நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com