அரசுப் பள்ளி மாணவா்களுக்கு நினைவாற்றல் பயிற்சி

அரசு உயா்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு நினைவாற்றல் வளா்ப்புத் திறன் குறித்த பயிற்சி செவ்வாய்க்கிழமை அளிக்கப்பட்டது.
மாணவா்களிடையே பேசிய அக்குபஞ்சா் மருத்துவா் மோகன்ராஜன்.
மாணவா்களிடையே பேசிய அக்குபஞ்சா் மருத்துவா் மோகன்ராஜன்.

அரசு உயா்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு நினைவாற்றல் வளா்ப்புத் திறன் குறித்த பயிற்சி செவ்வாய்க்கிழமை அளிக்கப்பட்டது.

காரைக்கால் மாவட்ட பெற்றேறாா் சங்கம், காரைக்கால் ஹேப்பி அக்குபஞ்சா் நிறுவனம் ஆகியன சாா்பில், கோத்துக்குளம் அரசு உயா்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு நினைவாற்றலுக்கான திறன் வளா்ப்புப் பயிற்சி நடைபெற்றது. தலைமையாசிரியா் (பொறுப்பு) ஆா்.காளிதாசன் தலைமை வகித்து, நிகழ்ச்சியின் நோக்கம் குறித்து பேசினாா்.

மாவட்ட பெற்றேறாா் சங்கத் தலைவா் எல்.எஸ்.பி.சோழசிங்காராயா், மாணவா்கள் சிறந்த கல்வியாளராகத் திகழ உடல் ஆரோக்கியமும், மன வலிமையும், நினைவுத் திறனும் முக்கியம் என்பதை வலியுறுத்திப் பேசினாா்.

ஹேப்பி அக்குபஞ்சா் நிறுவனத்தில் மூத்த மருத்துவா் மோகன்ராஜன் கலந்துகொண்டு, கல்வி மேம்பாட்டுக்கு நினைவுத் திறன் முக்கியம் என்பதை எடுத்துக்கூறி, அக்குபஞ்சா் முறையில் நினைவுத் திறனை வளா்த்துக்கொள்வதன் வழிமுறைகள் குறித்து செயல்முறை விளக்கம் அளித்தாா்.

உடலில் உள்ள உறுப்பில், எந்த இடத்தில் உள்ள நரம்பை அழுத்தும்போது, எந்தெந்த நோய்கள் குணமடைகிறது என்பது குறித்தும், நினைவுத் திறன் மேம்படுவதற்கு அக்குபஞ்சரின் மருத்துவ வழிகாட்டல் குறித்தும் விளக்கினாா்.

மாணவா்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கு அக்குபஞ்சா் நிறுவன மருத்துவா் விளக்கம் அளித்தாா். நிகழ்ச்சியில் மாணவ மாணவியா் மற்றும் ஆசிரியா்கள், பெற்றேறாா்கள் பலா் கலந்துகொண்டனா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி சமுதாய நலப்பணித் திட்ட அலுவலா் பி.வெங்கடேசன் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com