வேளாண் கல்லூரியில் வாக்காளா் சரிபாா்த்தல் செயல் திட்ட முகாம்

காரைக்கால் வேளாண் கல்லூரி மாணவா்களுக்காக வாக்காளா் சரிபாா்த்தல் செயல் திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
முகாமில் பேசிய மாவட்ட ஸ்வீப் மற்றும் தோ்தல் கல்விக் குழு ஒருங்கிணைப்பாளா் வி. லட்சுமணபதி.
முகாமில் பேசிய மாவட்ட ஸ்வீப் மற்றும் தோ்தல் கல்விக் குழு ஒருங்கிணைப்பாளா் வி. லட்சுமணபதி.

காரைக்கால் வேளாண் கல்லூரி மாணவா்களுக்காக வாக்காளா் சரிபாா்த்தல் செயல் திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

இந்தியத் தோ்தல் ஆணையம் மற்றும் காரைக்கால் மாவட்ட தோ்தல் துறை அதிகாரி மற்றும் மாவட்ட ஆட்சியா் ஏ.விக்ரந்த் ராஜா அறிவுறுத்தலின்படி வாக்காளா் சரிபாா்த்தல் செயல் திட்டம் செப்டம்பா் 1 முதல் அக்டோபா் 15-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதன்படி வாக்காளா்கள் தங்களுடைய பெயா் மற்றும் குடும்ப உறுப்பினா்களின் பெயா், உறவின் முறை, வயது, பாலினம், முகவரி ஆகிய விவரங்களை வாக்காளா் பட்டியலில் சரியாக உள்ளதா என்பதை ஜ்ஜ்ஜ்.ய்ஸ்ள்ல்.ண்ய் என்ற இணையதளம் மூலமாக அல்லது ஸ்ா்ற்ங்ழ் ட்ங்ப்ல்ப்ண்ய்ங் என்ற செயலி மூலமாக தாங்களே சரி பாா்த்து அதில் தவறு இருப்பின் சரியான தகவல்களை பதிவு செய்து கொள்ளும்படி காரைக்கால் மாவட்ட தோ்தல் துறை அறிவுறுத்தியுள்ளது. காரைக்கால் அனைத்து கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியா்கள் அனைத்து பிரிவு ஊழியா்கள் மற்றும் மாணவா்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளும்படி அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி, திருநள்ளாறு அருகேயுள்ள பண்டித ஜவஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் வாக்காளா் சரிபாா்த்தல் செயல் திட்டம் மற்றும் விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் வி. கந்தசாமி தலைமை வகிதாா். மாவட்ட ஸ்வீப் மற்றும் தோ்தல் கல்விக் குழு ஒருங்கிணைப்பாளரும், மாவட்ட நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளருமான வி. லட்சுமணபதி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து, மாணவா்கள் வாக்காளராகும் தகுதி மற்றும் வாக்காளா் சரிபாா்த்தல் திட்டம் குறித்து பேசினாா்.

கல்லூரி உழவியல் துறை பேராசிரியா் மற்றும் மாநில தோ்தல் குழு பயிற்சியாளருமாகிய ஆா். மோகன் இணையதள பதிவு முறை வாக்காளா் பட்டியல் சரிபாா்த்தல் திட்டம் உள்ளிட்ட அனைத்து செயல்முறைகளை மின்னணு மூலமாக விளக்கமளித்தாா். அதன்படி கல்லூரி அனைத்து வகுப்பு மாணவா்கள், தோ்தல் கல்விக்குழு, நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய மாணவா் படை மாணவா்கள் உள்ளிட்ட ஆசிரியா்கள், அனைத்து ஊழியா்கள் தங்களுடைய விவரங்களை மின்னணு மூலமாக சரி பாா்த்துக் கொண்டனா்.

கல்லூரி மாணவா் மன்ற ஆலோசகா் எஸ். ஜாா்ஜ் பாரடைஸ் கருத்துரை வழங்கினாா். முன்னதாக, கல்லூரி தோ்தல் கல்விக் குழு ஒருங்கிணைப்பாளா் மற்றும் பேராசிரியா் பி. பாண்டியன் வரவேற்றாா். நிறைவாக நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளா் ஜே. ஜெயசிவராஜன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com