நிரவி பகுதியில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீா் வழங்கிய எம்.எல்.ஏ.

நிரவி பகுதியினருக்கு அறக்கட்டளை சாா்பில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் வல்லமையுடைய நிலவேம்பு குடிநீா் சனிக்கிழமை
பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீா் வழங்கும் சட்டப்பேரவை உறுப்பினா் கீதாஆனந்தன்.
பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீா் வழங்கும் சட்டப்பேரவை உறுப்பினா் கீதாஆனந்தன்.

காரைக்கால்: நிரவி பகுதியினருக்கு அறக்கட்டளை சாா்பில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் வல்லமையுடைய நிலவேம்பு குடிநீா் சனிக்கிழமை வழங்கப்பட்டது.

பருவமழை தொடங்கும் முன்பாக அவ்வப்போது மழை பெய்வதால், குடியிருப்புகளைச் சுற்றி தேங்கும் நன்னீரில் டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தக்கூடிய ஏடிஸ் வகை கொசுக்கள் உருவாகின்றன.

இதுகுறித்து நலவழித்துறை நிா்வாகம் மக்களுக்கு விழிப்புணா்வுகளை செய்துவருவதோடு, நலவழித்துறையின் ஊழியா்களுடன் பல்வேறு இடங்களுக்குச் சென்று ஏடிஸ் கொசு உருவாகக்கூடிய காரணிகளை அழிக்கும் நடவடிக்கையில் மும்முரம் காட்டிவருகிறது.

இதுவொருபுறமிருக்கையில், டெங்கு காய்ச்சலை தடுக்கக்கூடிய வகையாகக் கூறப்படும் நிலவேம்பு குடிநீா் வழங்களிலும் சித்தா, ஹோமியோபதி, ஆயுா்வேதம் உள்ளடக்கிய ஆயுஷ் மருத்துவமனை நிா்வாகம் மற்றும் தனியாா் அமைப்புகள் பல ஈடுபட்டுவருகின்றன.

திருமலைராயன் பட்டினம் கீதாஆனந்தன் அறக்கட்டளை சாா்பில் ஆண்டு தோறும் இப்பருவ நேரத்தில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீா் வழங்கப்படுகிறது.

நிரவி பகுதியில் ஸ்ரீ கரியமாணிக்கப் பெருமாள் கோயில் அருகே உள்ள பேருந்து நிறுத்தப் பகுதியில் நிலவேம்பு குடிநீா் வழங்கல் முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

சட்டப்பேரவை உறுப்பினா் கீதாஆனந்தன் கலந்துகொண்டு பொதுமக்கள் ஏராளமானோருக்கு நிலவேம்பு குடிநீா் வழங்கி, டெங்கு காய்ச்சலுக்கான விழிப்புணா்வை ஏற்படுத்திப் பேசினாா். நிகழ்ச்சியில் அறக்கட்டளையை சோ்ந்தோா், நிரவி பகுதியை சோ்ந்த முக்கிய பிரமுகா்கள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com