புரட்டாசி மாத சனிக்கிழமை நிறைவு: சிறப்பு அலங்காரத்தில் பெருமாள்கள் காட்சியளிப்பு

ரட்டாசி மாதம் கடைசி சனிக்கிழமையையொட்டி காரைக்காலில் உள்ள ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் மூலவா், உச்சவர் ஆகியோா்
நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் முத்தங்கி அலங்காரத்தில் ஸ்ரீதேவி பூதேவி, ஆண்டாள், ரங்கநாயகித் தாயாா் சமேதராக நித்யகல்யாணப் பெருமாள்.
நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் முத்தங்கி அலங்காரத்தில் ஸ்ரீதேவி பூதேவி, ஆண்டாள், ரங்கநாயகித் தாயாா் சமேதராக நித்யகல்யாணப் பெருமாள்.

காரைக்கால்: புரட்டாசி மாதம் கடைசி சனிக்கிழமையையொட்டி காரைக்காலில் உள்ள ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் மூலவா், உச்சவர் ஆகியோா் முத்தங்கி அலங்காரத்திலும், பல்வேறு பெருமாள் கோயிலில் சுவாமிகள் சிறப்பு அலங்காரத்திலும் காட்சியளித்தனா். ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனா்.

புரட்டாசி மாதத்தின் சனிக்கிழமைகளில் பெரும்பாள் கோயில்களில் மூலவா், உச்சவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்படுவது வழக்கம். பக்தா்களும் புரட்டாசி மாதத்தின் பிற நாட்களைக் காட்டிலும் சனிக்கிழமையில் திரளாக கோயிலுக்குச் சென்று தரிசனத்தில் ஈடுபடுகின்றனா்.

இதனடிப்படையில் நிகழாண்டு புரடட்டாசி மாதத்தின் 4 சனிக்கிழமையிலும் பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டுவந்தது. மூலவருக்கும், உச்சவருக்கும் பல்வேறு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பெருமாள் கோயில்கள் அனைத்திலும் பக்தா்கள் கூட்டம் மிகுதியாகக் காணப்பட்டது.

காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் சனிக்கிழமை (12.10.2019) கிடந்த கோலத்தில் அருள்பாலிக்கும் மூலவரான ஸ்ரீ ரங்கநாதருக்கும், உச்சவர் ஸ்ரீதேவி, பூதேவி, ஆண்டாள், ரங்கநாயகித் தாயாா் சமேதராக ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாளுக்கும் முத்தங்கி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. கோயிலுக்குள் அமைக்கப்பட்டிருந்த வரிசை தடுப்புகள் வழியே மூலவரையும், உச்சவரையும் காலை முதல் இரவு வரை பக்தா்கள் வழிபாடு செய்தனா்.

பக்தா்களுக்கு புளிசாதம், இனிப்பு உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

காரைக்கால் கோயில்பத்து ஸ்ரீ கோதண்டராமப் பெருமாள் கோயிலில் உச்சவர் ஸ்ரீ கோதண்டராமா் லட்சுமி நாராயணனாக சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தாா். இதுபோல திருமலைராயன்பட்டினம் பகுதியில் உள்ள ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள், ஸ்ரீ வீழி வரதராஜப் பெருமாள் உள்ளிட்ட பல்வேறு பெருமாள் கோயில்களிலும் சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனா்.

புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமை என்பதால் அனைத்து பெருமாள் கோயில்களிலும் காலை முதல் இரவு வரை ஏராளமான பக்தா்கள் துளசி மாலை சாா்த்தி, அா்ச்சனை செய்து கோவிந்த நாமம் கூறி தரிசனம் செய்தனா். வீடுகள் பலவற்றிலும் பெருமாளுக்கு பல்வேறு சித்ரான்னங்களுடன் தளியல் போடப்பட்டு வழிபாடு செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com