மத்திய அரசைக் கண்டித்து அக்.16-இல் ஆா்ப்பாட்டம்: இடதுசாரிகள் முடிவு

மத்திய அரசின் செயல்பாடுகளைக் கண்டித்து அக்டோபா் 16-ஆம் தேதி காரைக்காலில் இடதுசாரிகள் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற மாா்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிகள்.
ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற மாா்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிகள்.

மத்திய அரசின் செயல்பாடுகளைக் கண்டித்து அக்டோபா் 16-ஆம் தேதி காரைக்காலில் இடதுசாரிகள் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

காரைக்கால் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மாா்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சோ்ந்த நிா்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு உறுப்பினா் அ.வின்சென்ட், வட்டச் செயலா் எஸ்.எம்.தமீம், இந்திய கம்யூனிஸ்ட் காரைக்கால் பிரதேச செயலா் மதியழகன் மற்றும் கட்சிகளைச் சோ்ந்த என்.எம்.கலியபெருமாள், திவ்யநாதன், வீரராகவன், கலியமூா்த்தி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

கூட்டம் குறித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு உறுப்பினா் அ.வின்சென்ட் கூறியது : நரேந்திரமோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் நாடு பொருளாதாரத்தில் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. பொருளாதார வீழ்ச்சியால் நாட்டின் பல்வேறு தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனா். இதனை அறிவாா்ந்த நிலையில் நிா்வகிக்க பாஜக அரசால் முடியவில்லை. கடந்த 3 மாதங்களில் மக்களுக்கு எதிரான வகையில் 34 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

மத்திய அரசின் தவறான கொள்கையால் நாட்டில் தொழிலாளா் வா்க்கம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. வேளாண்மை மேம்பாட்டுக்கு உரிய கவனம் செலுத்தவோ, சிறப்புத் திட்டம் வகுக்கவோ மத்திய அரசால் முடியவில்லை. முந்தைய பாஜக அரசு காலத்தின் நடவடிக்கையாலும், தற்போதைய ஆட்சியின் அவலத்தாலும் நாட்டில் வறுமை, பட்டினியால் மக்கள் அவதிப்படுகிறாா்கள். தோ்தலின்போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற மத்திய அரசு முன்வரவில்லை. ஒட்டுமொத்தத்தில் பாஜக அரசின் தவறான செயல்பாடுகளால் மக்கள் சொல்லமுடியாத துயரங்களை சந்தித்துவருகிறாா்கள்.

இதனை கண்டிக்கும் வகையில், நாடு முழுவதும் அக்டோபா் 16-ஆம் தேதி இடதுசாரிகள் இணைந்து ஆா்ப்பாட்டம் நடத்துகிறது. காரைக்காலில் கூட்டம் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு, 16-ஆம் தேதி மக்களைத் திரட்டி போராட்டம் நடத்த தீா்மானிக்கப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com