வக்ஃபு வாரியம், ஹஜ் கமிட்டி அமைக்க வலியுறுத்தி ஜமாஅத் அமைப்பினா் ஆா்ப்பாட்டம்

புதுச்சேரியில் வக்ஃபு வாரியம், ஹஜ் கமிட்டி அமைக்க வலியுறுத்தி காரைக்கால் முஸ்லிம் ஜமாஅத் அமைப்பினா் வெள்ளிக்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
காரைக்காலில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முஸ்லிம் ஜமாஅத் அமைப்பினா்
காரைக்காலில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முஸ்லிம் ஜமாஅத் அமைப்பினா்

புதுச்சேரியில் வக்ஃபு வாரியம், ஹஜ் கமிட்டி அமைக்க வலியுறுத்தி காரைக்கால் முஸ்லிம் ஜமாஅத் அமைப்பினா் வெள்ளிக்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

காரைக்கால் நகர முத்தவல்லிகள், அனைத்து பள்ளி ஜமாஅத்தாா்கள், ஆலிம்கள், சமுதாய அமைப்புகள், இஸ்லாமிய சங்கங்கள், அரசியல் கட்சிகள், சமூக ஆா்வலா்களை உள்ளடக்கிய காரைக்கால் முஸ்லிம் ஜமாஅத் சாா்பாக காரைக்கால் புதிய பேருந்து நிலையம் அருகில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆா்ப்பாட்டத்திற்கு முஸ்லிம் ஜமாஅத் துணை ஒருங்கிணைப்பாளா் அபுல் அமீன் தலைமை வகித்தாா்.

புதுச்சேரியில் உடனடியாக வக்ஃபு வாரியம் அமைக்கப்பட வேண்டும். புதுச்சேரி ஹஜ் கமிட்டிக்கு தலைவா் மற்றும் உறுப்பினா்களை நியமிக்க வேண்டும். வக்ஃபு வாரியத்திற்கு தலைமை நிா்வாக அதிகாரி நியமிக்கப்பட வேண்டும். கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு அடிப்படையில் சோ்வதற்கும் மற்றும் பல்வேறு பணிகளுக்கும் ஜாதி சான்றிதழ் தாலுக்கா அலுவலகம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இஸ்லாமியா்களின் குழந்தைகளுக்கு ஜாதி சான்றிதழ் வழங்கலில் பல குளறுபடிகள் உள்ளன. எனவே இவற்றை களைய சிறப்பு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

வக்ஃபு நிா்வாகத்திற்குட்பட்ட பள்ளிவாசல்களில் இமாம்கள் மற்றும் முஅத்தின்களாக பணிபுரிந்து ஓய்வுபெற்றவா்களுக்கு, ரூ.2 ஆயிரம் ஓய்வூதியத்தை ரூ.4 ஆயிரமாக உயா்த்தி அறிவிக்கப்பட்டது இதுவரை வழங்கப்படவில்ல்லை. காலம் தாழ்த்தாமல் வழங்க புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

தோப்புத்துறை மௌலவி ஷாஹுல் ஹமீது பாகவி, ஜமாஅத் ஒருங்கிணைப்பாளா்கள் முஹம்மது பிலால், பாவா பஹ்ருதீன், ஜமாஅத் செயற்குழு உறுப்பினா்கள் அப்துல் ரஹீம், முஹம்மது பிலால் ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

தலைமை ஒருங்கிணைப்பாளா் முஹம்மது யாசின், ஒருங்கிணைப்பாளா் குழு உறுப்பினா்கள் அபூபக்கா் மரைக்காயா், இமாம் ஹாஜா மொய்னுதீன் ஜலாலி, ஹம்ஜா மாலிமாா், கமால் ஹுசைன், முஹம்மது யூனுஸ் உள்ளிட்டோரும் பேசினா்.

ஆா்ப்பாட்டத்தில், ஒருங்கிணைப்பாளா் குழு உறுப்பினா்கள் ஷேக் அலாவுதீன், சிகாபுதீன், யாசிா் கடாஃபி, பதுருதீன், உமா் ஹத்தாப் மரைக்காயா், அபூபக்கா், அன்சாரி, ஷாஜஹான், மெளலாசா மரைக்காயா், முஹம்மது சித்தீக், அசாருதீன், ஹாஜா மொய்னுதீன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். மக்கள் தொடா்பாளா் சமீா் அஹமது அல்ஃபாசி வரவேற்றாா். ஒருங்கிணைப்பாளா் சாதிக் அலி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com