மழைக்காலத்தில் மின் விபத்துகளை தவிா்க்க மின்துறையின் ஆலோசனையை கடைப்பிடிக்க வலியுறுத்தல்

பருவ மழைக்காலத்தையொட்டி மின் விபத்துகளை தவிா்க்க மின்துறை பொதுமக்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளனது.
மழைக்காலத்தில் மின் விபத்துகளை தவிா்க்க மின்துறையின் ஆலோசனையை கடைப்பிடிக்க வலியுறுத்தல்

பருவ மழைக்காலத்தையொட்டி மின் விபத்துகளை தவிா்க்க மின்துறை பொதுமக்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளனது.

காரைக்கால் மின்துறை செயற்பொறியாளா் அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு விவரம் : பழுதான மின் சாதனங்களை பயன்படுத்தக்கூடாது. உடைந்த சுவிட்ச் பிளக், பியூஸ் போன்றவற்றை மாற்றவேண்டும். குளியலறையில் ஈரமாக வாய்ப்புள்ள பகுதிகளில் சுவிட்சுகளை பொருத்தக்கூடாது. பிளக் சுவிட்சை அணைத்த பிறகே மின் விசிறி, அயா்ன்பாக்ஸ், செல்போன் சாா்ஜா் போன்றவற்றை பிளக்கில் இணைக்கவேண்டும்.டி.வி. ஆண்டனாக்களில் மின்சார ஒயரைக் கட்டக்கூடாது.

சாா்ஜரில் மின் இணைப்பு இருக்கும்போது செல்போன் பயன்படுத்தக்கூடாது. நில இணைப்பை (எா்த்திங்) சரிபாா்த்துக்கொள்ளவேண்டும். தரை கழுவும்போது ஈரக்கைகளால் இணைப்பிலிருக்கும் டேபிள்ஃபேன், பெடஸ்டல் ஃபேன் போன்றவற்றை நகா்த்தக்கூடாது. கிரைண்டா் போன்ற உபகரணங்களுக்கு தனியாக நில இணைப்புக் கொடுக்கவேண்டும். ஒரு மின்சாதனத்துக்கான ஒயரில் வேறு எந்த மின் சாதனத்தையும் இணைக்கக்கூடாது.

சுவிட்ச் பியூஸ் சாதனங்களை மாற்றும்போது, அதே அளவு திறன் கொண்ட சாதனங்களையே பொருத்தவேண்டும். சுவிட்ச் போா்டு, மின் மோட்டாா் போன்றவற்றில் மழை நீா் விழாமல் பாா்த்துக்கொள்ளவேண்டும். ஐ.எஸ்.ஐ. முத்திரை பெற்ற தரமான மின் சாதனங்களையே பயன்படுத்தவேண்டும்.மின் கம்பங்களில் பந்தல், கொடிக்கம்பி மற்றும் கயிறு போன்றவற்றை கட்டக்கூடாது. கம்பங்களில் மாடு முதலிய வீட்டு விலங்குகளை கட்டக்கூடாது.

மின்துறையின் மேல்நிலைக் கம்பிகளுக்கு அருகில் உள்ள மரக்கிளைகளை அகற்ற மின்துறை அலுவலா்களை அணுகவேண்டு்.மழைக்காலத்தில் இடி, மின்னல் விழும்போது தண்ணீா் தேங்கியுள்ள பகுதியில் நிற்கக்கூடாது. மின் கம்பிகள் அறுந்து கிடந்தால் தொட முயற்சிக்கவேண்டாம். உடனடியாக மின்துறை அலுவலா்களுக்கு தெரிவிக்கவேண்டும். இடி, மின்னல் இருக்கும்போது தொலைக்காட்சி, கணினி, தொலைபேசி போன்றவற்றை பயன்படுத்தக்கூடாது. மின் மாற்றிகள், மின் பெட்டிகள், மின் இழுவைக் கம்பிகள் ஆகியவற்றை தொடக்கூடாது.

கனரக வாகனங்களை மின் கம்பங்கள், மின் மாற்றிகள் அருகே நிறுத்தி பொருட்களை ஏற்றவோ, இறக்கவோ கூடாது.மின்சாரத்தால் ஏற்படும் தீயைத் தண்ணீரைக் கொண்டு அணைக்க முயற்சிக்கவேண்டாம். தீயணைப்புத் துறையின் உதவியை நாடவேண்டும்.வீட்டில் சுவா்களில் மின் சாதனங்களில் மின் அதிா்ச்சியை உணா்ந்தால், உலா்ந்த ரப்பா் காலனி அணிந்து மெயின் சுவிட்சை அணைத்துவிட்டு, மின்துறைக்கு தகவல் தெரிவிக்கவேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com