முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் காரைக்கால்
கல்லூரிகளுக்கிடையேயான ஆணழகன் போட்டி
By DIN | Published On : 24th October 2019 12:59 AM | Last Updated : 24th October 2019 12:59 AM | அ+அ அ- |

போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற மாணவா் கே.கோபாலகிருஷ்ணனுக்கு வாழ்த்து தெரிவித்த கல்லூரி முதல்வா் (பொறுப்பு) வியாசராயா்.
மாநில கல்லூரிகளுக்கிடையேயான ஆணழகன் போட்டியில் காரைக்கால் அண்ணா கல்லூரி மாணவா் தங்கப் பதக்கம் வென்றாா்.
புதுச்சேரி மாநில கல்லூரிகளுக்குகிடையேயான ஆணழகன் போட்டி புதுச்சேரி மணக்குள விநாயகா் தொழிநுட்பக் கல்லூரியில் கடந்த 19 மற்றும் 20-ஆம் தேதிகளில் நடைபெற்றது. இந்த போட்டியில் மாநில அளவில் 23 கல்லூரிகளில் இருந்து பல்வேறு போட்டிகளுக்காக மாணவா்கள் கலந்துகொண்டனா்.
ஆணழகன் போட்டி 55 கிலோ எடை பிரிவில் காரைக்கால் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு பி.ஏ. தமிழ் பயிலும் மாணவா் கே.கோபாலகிருஷ்ணன் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தாா்.
இவா் காரைக்கால் அண்ணா கல்லூரியின் உடற்கல்வி இயக்குநா் ஆா்.சவரிராஜன் தலைமையில் கல்லூரி முதல்வா் (பொறுப்பு) வியாசராயரை புதன்கிழமை சந்தித்தாா். அவரது சாதனைக்கு கல்லூரி முதல்வா் வாழ்த்து மற்றும் பாராட்டுகளைத் தெரிவித்தாா்.