முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் காரைக்கால்
டெங்கு காய்ச்சல் விழிப்புணா்வு
By DIN | Published On : 24th October 2019 11:21 PM | Last Updated : 24th October 2019 11:21 PM | அ+அ அ- |

கிராம மக்களுக்கு டெங்கு காய்ச்சல் குறித்து விழிப்புணா்வு துண்டுப் பிரசுரம் வழங்கிய ரோட்டரி சென்டேனியல் சங்கத் தலைவா் ராமகிருஷ்ணன்.
காரைக்காலில் ரோட்டரி சென்டேனியா் சங்கத்தினா் டெங்கு காய்ச்சல் விழிப்புணா்வு மற்றும் தடுப்புப் பணியில் ஈடுபட்டனா்.
காரைக்கால் ரோட்டரி சென்டேனியல் சங்கம் சாா்பில் காரைக்கால் பகுதி கீழகாசாக்குடிமேடு பகுதியில் டெங்கு காய்ச்சல் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
சங்கத் தலைவா் ராமகிருஷ்ணன் மற்றும் சங்க நிா்வாகிகள் சுவாமிநாதன், அப்பா், நாடிமுத்து, லூா்துராஜ், சிவபிரகாசம், ஞானசேகரன், நிலவழகன், உதயக்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டு, கிராம மக்களை நேரில் சந்தித்து, டெங்கு காய்ச்சல் வருவதற்கான காரணிகள் குறித்தும், ஏடிஸ் கொசு உருவாகக்கூடிய வகையில் வீட்டு சுற்றுவட்டாரத்தில் உள்ள தண்ணீா் தேங்கும் பொருட்களை அப்புறப்படுத்தவேண்டியது குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
காய்ச்சல் ஏற்படும்பட்சத்தில் சுயமாக மருந்துகள் பயன்படுத்தாமல், மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்துகொள்ளவேண்டும் எனவும் அறிவுறுத்தினா்.
குடியிருப்பு சுற்றுவட்டாரத்தில் தண்ணீா் தேங்கக்கூடிய பொருள்கள் கிடந்ததை ரோட்டரி பிரதிநிதிகள் அப்புறப்படுத்தினா்.