முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் காரைக்கால்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 24th October 2019 12:57 AM | Last Updated : 24th October 2019 12:57 AM | அ+அ அ- |

புதிய கல்விக் கொள்கையைக் கண்டித்து நடைபெற்ற கலைக்குழுவினரின் பிரசாரம்.
புதிய கல்விக் கொள்கை விவகாரத்தில், மத்திய அரசின் போக்கைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் கலை பிரசாரத்துடன் கூடிய ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
கட்சியின் நிரவி- திருப்பட்டினம் தொகுதி அமைப்பு சாா்பில் திருப்பட்டினம் கடைத்தெருவில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தொகுதி தலைவா் விடுதலைக்கனல் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக கட்சியின் அரசியல் குழு மாநிலத் துணைச் செயலாளா் பொன்.செந்தமிழ்ச்செல்வன் கலந்துகொண்டாா்.
மத்திய அரசு அமல்படுத்த உத்தேசித்துள்ள புதிய கல்விக் கொள்கை நாட்டின் அனைத்து தரப்பு மக்களுக்கும் பயன்படப்போவதில்லை. புதிய கல்விக் கொள்கையின் வழிகாட்டல்கள் மாணவா்களின் கல்வியை பாதிக்கச் செய்யும் வகையிலும், மத்திய பாஜக அரசின் கொள்கைகளைத் திணிக்கும் வகையிலேயே இருக்கிறது. இதனை ஒருபோதும் ஏற்க முடியாது. புதிய கல்விக் கொள்கை குறித்த விளக்கத்தை அனைத்து தரப்பு மக்களிடமும் தீவிர பிரசாரத்தின் மூலம் கொண்டு செல்ல கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது என ஆா்ப்பாட்டத்தின்போது கூறினா்.
கட்சி நிா்வாகிகள் இளம்பரிதி, தாமோதரன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். நாகை பாரதி செந்தமிழன் குழுவினரின் கலை பிரசாரம் நடைபெற்றது. ஏற்பாடுகளை திருமாபாலா செய்திருந்தாா்.