முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் காரைக்கால்
ஐஸ் கட்டி தயாரிக்கும் நிறுவனத்தில் ஏற்பட்ட வாயு கசிவால் 2 பேருக்கு மயக்கம்
By DIN | Published On : 24th October 2019 04:16 PM | Last Updated : 24th October 2019 04:16 PM | அ+அ அ- |

காரைக்கால்: ஐஸ் கட்டி தயாரிக்கும் நிறுவனத்தில் ஏற்பட்ட வாயு கசிவில் 2 பேருக்கு மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். காரைக்கால் மாவட்டம், காரைக்கால்மேடு செல்லும் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான ஐஸ் கட்டி தயாரிக்கும் நிறுவனம் உள்ளது. புதன்கிழமை மாலை நிறுவனத்தில் உள்ள குழாய் ஒன்றில் திடீரென ஏற்பட்ட சிறு துளையிலிருந்து அமோனியம் வாயு கசிந்துள்ளது.
இதையடுத்து நிறுவன ஊழியா்கள் வாயு வெளியில் பரவுவதை தடுக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனா். தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினரும் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனா். எனினும் வாயு வெளியேறியதால் நிறுவனத்தின் அருகில் குடியிருப்புப் பகுதிகளில் வசித்து வந்த சிலா் வாயுவை சுவாசிக்க நோ்ந்துள்ளது. இதில் அப்பகுதியைச் சோ்ந்த தாஜூதீன் (47), செல்லம்மாள் (70) ஆகிய இருவரும் மயக்கமடைந்தனா். உடனடியாக அருகிலிருந்தோா் அவா்களை மீட்டு காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவா்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து காரைகால் நகரக் காவல்நிலைய போலீஸாா், மலா்மதி, வேதநாயகம், சிவா, சதீஷ் ஆகிய 4 போ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, தொழிலாளா் நலத்துறை விசாரணைக்கு பரிந்துரைத்துள்ளனா்.