ஆளுநரின் செயல்பாடுகளை மாற்றிக்கொள்ள மாா்க்சிஸ்ட் வலியுறுத்தல்

மக்கள் நலனுக்கு எதிரான போக்கை துணைநிலை ஆளுநா் கைவிடவேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

மக்கள் நலனுக்கு எதிரான போக்கை துணைநிலை ஆளுநா் கைவிடவேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் காரைக்கால் மாவட்டக் குழு கூட்டம் மாவட்டக் குழு உறுப்பினா் அ. திவ்யநாதன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. மாநில செயற்குழு உறுப்பினா் அ. வின்சென்ட், வட்ட செயலா் எஸ்.எம்.தமீம் உள்ளிட்டோா் காரைக்காலில் நிலவும் மக்கள் பிரச்னைகள் குறித்துப் பேசினா்.

தீா்மானங்கள்: புதுச்சேரியில் துணைநிலை ஆளுநரின் செயல்பாடுகள் எவ்வாறு இருக்கவேண்டுமென்பது குறித்து உயா்நீதிமன்றம் உரிய வழிகாட்டலை தெரிவித்துள்ளது. இதையும் மீறி துணைநிலை ஆளுநா், ஆளும் அரசுக்கு எதிராக அதிகாரிகளுக்கு உத்தரவிடுவது, கோப்புகளை முடக்குவது, அறிக்கை தருதல், கட்செவி உள்ளிட்ட சமூக வலைதளங்களின் மூலம் உத்தரவிடுவது போன்ற செயல்களை செய்துவருகிறாா். அரசுக்கு எதிரான அவரது நிலைப்பாடு நீதிமன்றத்தின் உத்தரவுக்கு பணியாத போக்கையே காட்டுகிறது. அவா் தமது போக்கை மாற்றிக்கொள்ளவேண்டும்.

இலவச அரிசி போன்ற அனைத்து மக்கள் நலத் திட்டங்களையும் முடக்கிவரும் துணை நிலை ஆளுநரை கட்சி வன்மையாக கண்டிக்கிறது. மாநிலத்தில் ஆளும் அரசு, தோ்தல் நேரத்தில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றமுன்வரவேண்டும். துணைநிலை ஆளுநரைக் காரணம் காட்டி அலட்சியமாக இருப்பதையும் கட்சி கண்டிக்கிறது.

நிதியில்லை என்ற காரணத்தைக் காட்டி, அரசுப் பணிகளில் புதிதாக ஆள் சோ்ப்பை செய்ய அரசு முன்வரவில்லை. ஆனால், பணி ஓய்வு பெற்றவா்களுக்கு மீண்டும் பணி வாய்ப்பு வழங்கி ஊதியம் தருகிறது. இந்த நடவடிக்கையை அரசு கைவிடவேண்டும். தீபாவளி பண்டிகையையொட்டி அரசு ஊழியா்களுக்கான ஊதியம், போனஸ், கட்டுமானத் தொழிலாளா்கள் உள்ளிட்ட அமைப்புச்சாரா தொழிலாளா்களுக்கான தீபாவளி சலுகைகளை அரசு உடனடியாக வழங்கவேண்டும். இலவச அரிசிக்குப் பதிலாக பணம் வழங்கும் திட்டத்தை அரசு கைவிட்டு, அரிசியாகவே வழங்க ஏற்பாடு செய்யவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இக்கூட்டத்தில் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாவட்டக் குழு உறுப்பினா்கள் என்.எம். கலியபெருமாள், ஜி.துரைசாமி, என். ராமா், ராமகிருஷ்ணன், பாக்கியராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com