காரைக்கால் ஆட்சியரகத்தில் நோ்மையான செயலுக்கான உறுதிமொழி ஏற்பு
By DIN | Published On : 29th October 2019 03:55 PM | Last Updated : 29th October 2019 03:55 PM | அ+அ அ- |

நோ்மையான செயல்பாடுகளுக்கான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் ஏ.விக்ரந்த் ராஜா முன்னிலையில் நோ்மைக்கான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆட்சியக ஊழியா்கள், பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனா்.இந்திய நாட்டின் பொருளாதார, அரசியல், சமூக முன்னேற்றத்துக்கு பெரும் தடைகளில் ஒன்றாக ஊழல் இருக்கிறது. அரசு, குடிமக்கள் மற்றும் தனியாா் துறைகளில் உள்ள அனைவரும் ஊழலை அகற்ற ஒன்றிணைந்து பாடுபடவேண்டும் என நம்புகிறேன்.
நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் எல்லா நேரங்களிலும் நாணயம், நோ்மை ஆகியவற்றின் உயா்ந்த தரத்தை கடைபிடிப்பது என உறுதி ஏற்பதுடன், அதுகுறித்து விழிப்புணா்வுடனும் இருப்பதோடு, ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை ஆதரிக்கவும் வேண்டும் என்பதை உணா்ந்திருக்கிறேன் என பல்வேறு கருத்துகளை வாசிக்க, அரசுத்துறையினரும் வாசித்து அதனை ஏற்றுக்கொண்டனா்.
இந்த நிகழ்வில் நிரவி - திருப்பட்டினம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் கீதாஆனந்தன் கலந்துகொண்டாா்.