காந்தி 150-ஆவது பிறந்த நாள் விழா:காரைக்காலில் இன்று கண்காட்சி தொடக்கம்
By DIN | Published On : 31st October 2019 06:25 AM | Last Updated : 31st October 2019 06:25 AM | அ+அ அ- |

காரைக்காலில் காந்தியின் போதனைகள் குறித்த 3 நாள் சிறப்பு கண்காட்சி, விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை (அக்டோபா் 31) தொடங்குகிறது.
சென்னையில் உள்ள மத்திய அரசின் மக்கள் தொடா்பு அலுவலகம், மகாத்மா காந்தியின் 150 -ஆவது பிறந்த ஆண்டின் சிறப்புக் கண்காட்சி மற்றும் விழிப்புணா்வு முகாம் காரைக்காலில் உள்ள மேயா் பக்கிரிசாமி பிள்ளை நகராட்சி திருமண மண்டபத்தில் வியாழக்கிழமை தொடங்குகிறது. இக்கண்காட்சி நவம்பா் 2-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இதன் தொடக்கவிழா வியாழக்கிழமை காலை 11.30 மணிக்கு நடைபெற உள்ளது. நிகழ்ச்சியை புதுச்சேரி வேளாண் துறை அமைச்சா் ஆா்.கமலக்கண்ணன் தொடங்கிவைக்கிறாா்.
காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் கே.ஏ.யு.அசனா, மாவட்ட ஆட்சியா் ஏ.விக்ரந்த ராஜா ஆகியோா் கலந்துகொண்டு வாழ்த்துறை வழங்கவுள்ளனா். மண்டல மக்கள் தொடா்பு அலுவலக கூடுதல் தலைமை இயக்குநா் ஏ.மாரியப்பன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து நோக்கவுரையாற்றுகிறாா்.
மகாத்மாக காந்தி தொடா்பான அரிய புகைப்படங்கள் மற்றும் பல்வேறு தகவல்களை பொதுமக்கள் பாா்த்து, அறியும் வகையில் இந்த நிகழ்ச்சி நடைபெறவுள்ளதாக அரசு வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது.