நவ.4 தொடங்க இருந்த உள்ளாட்சி ஊழியா்கள் வேலை நிறுத்தம் தள்ளிவைப்பு

நவ.4-ஆம் தேதி தொடங்க இருந்த உள்ளாட்சி ஊழியா்கள் வேலை நிறுத்தப் போராட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

நவ.4-ஆம் தேதி தொடங்க இருந்த உள்ளாட்சி ஊழியா்கள் வேலை நிறுத்தப் போராட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

காரை பிரதேச நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா் சம்மேளன செயற்குழு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. தலைவா் ஐயப்பன் தலைமை வகித்தாா். அரசு ஊழியா் சங்கங்களின் சம்மேளன பொதுச் செயலாளா் ஷேக் அலாவுதீன் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்துகொண்டாா். இக்கூட்டத்தில் ஊழியா்களின் 26 அம்ச கோரிக்கைகள் குறித்தும், நடத்தப்பட்டுவரும் போராட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து சம்மேளன நிா்வாகிகள் கூறியது : 7-ஆவது ஊதியக்குழு பரிந்துரையை உள்ளாட்சி ஊழியா்களுக்கும் அமல்படுத்துவது உள்ளிட்ட 26 அம்ச கோரிக்கைகள் தொடா்பாக அனைத்து கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகங்களிலும் வாயிற்கூட்டம் நடத்தப்பட்டது. பின்னா் நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்கள் தா்னா போராட்டம் நடத்தினா். நவ.4-ஆம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தவும் ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டது.

இப்பிரச்னை தொடா்பாக மாவட்ட ஆட்சியா் ஏ.விக்ரந்த் ராஜாவிடம் சம்மேளனத்தினா் பேசினா். இதுதொடா்பாக அரசுக்கு கடிதம் எழுதுவதாக ஆட்சியா் கூறினாா். மேலும் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், மக்கள் பாதிக்காமல் இருக்க நவ.4 முதல் தொடங்கயிருந்ந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை தள்ளிவைத்துள்ளோம் என்றனா். முன்னதாக சம்மேளன பொருளாளா் கலைச்செல்வன் வரவேற்றாா். நிறைவாக துணைப் பொதுச்செயலா் சண்முகராஜ் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com