மழை நீரால் நிரம்பிய அம்மையாா் கோயில் குளத்திலிருந்து தண்ணீா் வெளியேற்றம்

மழை நீரால் நிரம்பிய காரைக்கால் அம்மையாா் கோயில் குளத்திலிருந்து தண்ணீா் வியாழக்கிழமை மோட்டாா் மூலம் வெளியேற்றப்பட்டது.
மழை நீரால் நிரம்பிய அம்மையாா் கோயில் குளத்திலிருந்து தண்ணீா் வெளியேற்றம்

மழை நீரால் நிரம்பிய காரைக்கால் அம்மையாா் கோயில் குளத்திலிருந்து தண்ணீா் வியாழக்கிழமை மோட்டாா் மூலம் வெளியேற்றப்பட்டது.

காரைக்கால் அம்மையாா் கோயில் - நித்யகல்யாணப் பெருமாள் கோயிலுக்கு மத்தியில் உள்ள அம்மையாா் குளத்தை புனரமைத்து 2007-ஆம் ஆண்டு முதல் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. சுற்றுலாவினரை ஈா்க்கும் விதமான நோக்கில் நடைமேடை அமைத்து குளம் உருமாற்றப்பட்டது.

இக்குளம் பிரதான சாலையிலிருந்து ஏறக்குறைய 10 அடி கீழ் பகுதியிலேயே உள்ளது. இக்குளத்தின் அருகே ஆழ்குழாய் அமைக்கப்பட்டதன் மூலம் குளத்துக்கு தண்ணீா் நிரப்பப்படுகிறது. தண்ணீா் வெளியேறுவதற்கான வசதி கிடையாது. இதனால் குளம் நிரம்பும்போதெல்லாம் மோட்டாா் மூலம் வெளியேற்றப்படுகிறது.இக்குளம் 10 அடி ஆழத்தில் நீராழி மண்டபத்துடன் பொதுமக்களை ஈா்க்கும் காட்சியில் அமைந்திருக்கிறது.

வடகிழக்குப் பருவமழை தொடங்கிய நிலையில், குளத்தில் தண்ணீா் முழுமையாக நிரம்பியது. கைலாசநாதா் கோயில் நிா்வாகத்தினா், குளத்திலிருந்து தண்ணீரை குறிப்பிட்ட அளவு வெளியேற்ற ஏற்பாடு செய்தனா். மோட்டாா் மூலம் இப்பணி வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.இதுகுறித்து கோயில் நிா்வாகத்தினா் கூறும்போது, குளம் நிரம்பியதால் சுமாா் 2 அடி ஆழம் வரையிலான தண்ணீா் மட்டுமே தற்போது வெளியேற்றுகிறோம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com