காவிரி நீர் வராததைக் கண்டித்து நாளை சாலை மறியல்: விவசாயிகள் சங்கம் முடிவு

காரைக்கால் பகுதிக்கு போதிய காவிரி நீர் வராததைக் கண்டித்து,  வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 13) சாலை மறியல் போராட்டம் நடத்த விவசாயிகள் சங்கம் முடிவு செய்துள்ளது.

காரைக்கால் பகுதிக்கு போதிய காவிரி நீர் வராததைக் கண்டித்து,  வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 13) சாலை மறியல் போராட்டம் நடத்த விவசாயிகள் சங்கம் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, அகில இந்திய விவசாயிகள் சங்க காரைக்கால் மாவட்டத் தலைவர் எஸ்.எம். தமீம் புதன்கிழமை கூறியது: மேட்டூர் அணை நிரம்பிவிட்டது. அணைக்கு நீர்வரத்தும் மிகுதியாக உள்ளது. வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. எனினும், காரைக்கால் கடைமடைப் பகுதியின் அனைத்து ஆறுகளிலும் தண்ணீர் வரவில்லை. கடந்த சில நாள்களுக்கு முன்பு காரைக்கால் எல்லைக்கு வந்த தண்ணீர் பரவலாக மாவட்டம் முழுமைக்கும் வரவில்லை.  காரைக்கால் பகுதிக்கு தண்ணீரை விரைவாக பெறாததைக் கண்டித்தும்,  அனந்தநல்லூர் பகுதியில் பழுதடைந்துள்ள 5 கண்கள் கொண்ட மதகை சீரமைக்காததைக் கண்டித்தும்,  மானாம்பேட்டையிலிருந்து திருப்பட்டினம் வரையிலான வாய்க்கால் தூர்வாரப்படாததைக் கண்டித்தும், திருமலைராயன்பட்டினம் விவசாயிகள் சங்கம் சார்பில் திருமலைராயன்பட்டினம் பகுதி தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com