கால்நடை நோய் கட்டுப்பாட்டுத் திட்ட விளக்க நிகழ்ச்சி

தேசிய கால்நடை நோய் கட்டுப்பாட்டுத் திட்ட  விளக்க நிகழ்ச்சி காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

தேசிய கால்நடை நோய் கட்டுப்பாட்டுத் திட்ட  விளக்க நிகழ்ச்சி காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
தேசிய கால்நடை நோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி உத்தரப் பிரதேசத்தில் புதன்கிழமை தொடங்கிவைத்தார். இந்த நிகழ்ச்சியை காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையத்தில், விவசாயிகள் காணொலி மூலம் பார்த்தனர். வரும் 2024-ஆம் ஆண்டுக்குள் ஆடு, மாடு, பன்றி, மாடுகள் என 50 முதல் 60 கோடி கால்நடைகளுக்கு நோய் தடுப்பூசி போடும் விதத்தில் இந்த திட்டம்  தொடங்கப்பட்டது.
காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையத்தில் புதுச்சேரி வேளாண் துறை அமைச்சர் ஆர். கமலக்கண்ணன் மற்றும் விவசாயிகள் 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பிரதமரின் உரையைக் கேட்டனர். தொடர்ந்து, பிரதமரின் ஹிந்தி மொழி உரையை வேளாண் அதிகாரி ஆமினா பீவி விவசாயிகளுக்கு தமிழாக்கம் செய்தார். 
பின்னர் அமைச்சர் பேசியது:புதுச்சேரி அரசு சார்பில் தேசிய திட்டத்தின்படி ஆண்டுக்கு இரண்டு முறை கோமாரி நோய் தடுப்பூசி போடப்படுகிறது. கால்நடை வளர்ப்போர் உரிய விழிப்புணர்வோடு இருக்கும்பட்சத்தில், கால்நடைகளுக்கு நோய் வராமலும், வந்தால் அதிலிருந்து காப்பாற்றவும் முடியும். இதற்கு இதுபோன்ற திட்டங்களை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
பால் உற்பத்தியை பெருக்கும் விதத்தில் புதுச்சேரி அரசு, பால் உற்பத்தியாளர்களுக்கான தொகையை அதிகரித்துள்ளது. பால் உற்பத்தி என்பது லாபகரமான தொழில் என்பதால், கால்நடை வளர்ப்பில் அதிக ஆர்வம் செலுத்தவேண்டும் என்றார் அமைச்சர். நிகழ்ச்சியில், வேளாண் அறிவியல் நிலைய முதல்வர் ரத்தினசபாபதி, கால்நடைத் துறை இணை இயக்குநர் லதா மங்கேஷ்கர், கால்நடை மருத்துவர்கள் சுரேஷ், சம்பத், கோபு மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இத்திட்டம் குறித்து வேளாண் அறிவியல் நிலைய அதிகாரிகள் கூறியது: கோமாரி நோய்  தடுப்பூசித் திட்டம், கன்று வீச்சு நோய் கட்டுப்படுத்துதல், செயற்கை முறை கருவூட்டலை அதிகரித்தல் குறித்து சிறப்புத் திட்டத்தில் கூறப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் கால்நடைகளுக்குத் தடுப்பூசி போடும் பணி முழுமையாக மேற்கொள்ளப்படுவதால் 90 சதவீதத்துக்கு மேல் பாதிப்பில்லை. தேசிய அளவில் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், சிகிச்சைக்கான திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து விவசாயிகளுக்குத் தெளிவாக விளக்கப்பட்டது என்றனர்.
இந்நிகழ்வின்போது, 18 மாடுகளுக்கு செயற்கை முறையில் கருவூட்டும்  ஊசி போடப்பட்டது. கால்நடையை ஆரோக்கியமாக வளர்க்கும் முறைகள் குறித்தும் மருத்துவர்கள் விளக்கிப் பேசினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com