அண்ணா சிலைக்கு திமுக, அதிமுகவினர் மாலை அணிவிப்பு

 பேரறிஞர் அண்ணாவின் 111-ஆவது பிறந்தநாளையொட்டி, காரைக்கால் பகுதியில் உள்ள அண்ணா சிலைகளுக்கு திமுக, அதிமுகவினர் ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


 பேரறிஞர் அண்ணாவின் 111-ஆவது பிறந்தநாளையொட்டி, காரைக்கால் பகுதியில் உள்ள அண்ணா சிலைகளுக்கு திமுக, அதிமுகவினர் ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
காரைக்கால் மாவட்ட அதிமுக, திமுக  சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. கோட்டுச்சேரியில் உள்ள கட்சி அலுவலகத்திலிருந்து அதிமுகவினர் அப்பகுதியில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்க ஊர்வலமாக சென்றனர்.
மாவட்டச் செயலரும், சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினருமான எம்.வி.ஓமலிங்கம் தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்துமரியாதை செலுத்தப்பட்டது.
திமுக சார்பில் காரைக்காலில் இலக்கிய அணி அமைப்பாளர் அமுதா ஆர்.ஆறுமுகம் தலைமையில் மரியாதை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. காரைக்கால் திமுக அலுவலக வாயிலில் அண்ணா உருவப் படம் வைத்து மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் கட்சி நிர்வாகிகள் கோட்டுச்சேரிக்கு சென்று அங்குள்ள அண்ணா சிலைக்கு மரியாதை செலுத்தினர்.   பொதுக்குழு உறுப்பினர் ஜி.ஆர்.சேகர், வடக்குத் தொகுதி செயலர் ஜி.ராஜ்மோகன், இலக்கிய அணி துணை அமைப்பாளர்கள் சுப.கம்பதாசன், மகளிரணி அமைப்பாளர் கோ.வைஜெயந்திராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அதிமுக, திமுகவினர் அண்ணா உருவப் படத்தை அலங்கரித்து வைத்து மரியாதை செலுத்தினர்.
காரைக்கால் அண்ணாகல்லூரியில்... 
அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் கல்லூரி வளாகத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது. சங்கத் தலைவர் பி.பி.கே.செல்வமணி, பொதுச்செயலாளர் ஆர்.காளிதாசன், பொருளாளர் ஜி.கலைமணி, ஆலோசனைக்குழு உறுப்பினர் கே. ஜீவானந்தம் உள்ளிட்ட பலர், கல்லூரியில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்துமரியாதை செலுத்தினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com