கல்லூரி மாணவிகள் அமைத்த வேளாண் தொழில்நுட்பக் கண்காட்சி

நல்லாத்தூர் கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் சார்பில் வேளாண் தொழில்நுட்பக் கண்காட்சி சனிக்கிழமை நடைபெற்றது. 

நல்லாத்தூர் கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் சார்பில் வேளாண் தொழில்நுட்பக் கண்காட்சி சனிக்கிழமை நடைபெற்றது. 
காரைக்கால் மாவட்டம், நல்லாத்தூர் கிராமத்தில் ஊரக வேளாண் ஆய்வுப் பணி முகமை மூலம், பண்டித ஜவாஹர்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பயிலும் 4-ஆம் ஆண்டு மாணவிகளால், வேளாண் துறையில் வளர்ந்துவரும் தொழில்நுட்பங்கள், அதனை கையாளும் முறை குறித்த விழிப்புணர்வாக கண்காட்சி நடத்தப்பட்டது.
பாரம்பரிய வேளாண்மையை பின்பற்றும் நோக்கில் பாரம்பரிய நெல் ரகங்கள், இயற்கை பூச்சி விரட்டிகள், பயிர் ஊக்கிகள் தயாரிக்கும் முறை, சாண எரிவாயு உற்பத்தி செய்யும் முறை, காளான் வளர்ப்பு, ஒருங்கிணைந்த பண்ணையம், சூரிய இயங்கு நீர் பாசனம், மண்ணில்லா விவசாயமான நீரியல் வளர்ப்பு (ஹைட்ரோ போனிக்ஸ்), பரண்மேல் ஆடு வளர்ப்பு, மழைநீர் சேகரிப்பு, தேனீ வளர்ப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து மாதிரிகள் வைக்கப்பட்டு, விளக்கம் தரப்பட்டது.
நெடுங்காடு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் சந்திர பிரியங்கா சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு, கண்காட்சியைப் பார்வையிட்டு, ஒவ்வொன்றின் விளக்கத்தையும் கேட்டறிந்தார். மாணவிகள் ஆர். அபிநயா, ஆர். அனுஷா, பா.தீபிகா, தேவிஸ்ரீ, கா. கிருபாஸ்ரீ, பல்லே சௌஜனீயா ரெட்டி, பி. பிரியதர்ஷினி, அ. ராஜம், க. சங்கீதா ஆகியோர் இக்கண்காட்சியை அமைத்திருந்தனர்.
வேளாண் கல்லூரி பேராசிரியர்கள் பார்த்தசாரதி, புஷ்பராஜ், நெடுங்காடு வேளாண் அதிகாரி பாலசண்முகம், வேளாண் விரிவாக்க பணியாளர்கள் உள்ளிட்ட வேளாண் கல்லூரி ஊழியர்கள் கலந்துகொண்டனர்.  நல்லாத்தூர் மற்றும் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் இக்கண்காட்சியைப் பார்வையிட்டு, மாணவிகளிடம் விளக்கம் கேட்டறிந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com