மின்னணுவியல், தகவல் தொடர்பு தேசியக் கருத்தரங்கம்

என்.ஐ.டி.யில் மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் தேசியக் கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.

என்.ஐ.டி.யில் மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் தேசியக் கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.
காரைக்காலில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் (என்.ஐ.டி.) மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் துறை சார்பில் ஒரு நாள் தேசியக் கருத்தரங்கம் என்.ஐ.டி. இயக்குநர் கே. சங்கரநாராயணசாமி தலைமையில் நடைபெற்றது. மின்னணு மற்றும்  தகவல் தொடர்பு நிறுவனமான காலிகட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் எம்.பி. பிள்ளை கருத்தரங்கை குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தார்.
இக்கருத்தரங்கில் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து  100- க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். 35 -க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்து நிறுவனத்தினர், மாணவர்கள் பேசினர்.
 மேலும், இக்கருத்தரங்கின் ஒரு அங்கமாக என்.ஐ.டி. இயக்குநர் கே.சங்கரநாராயணசாமி, இன்ஸ்டிடியூஷன் ஆஃப் இன்ஜினீயர்ஸ் இந்தியா நிறுவனத்துடன், என்.ஐ.டி. மாணவர் குழுமத்தை தொடங்கிவைத்தார்.  இந்த நிகழ்வில் இன்ஸ்டிடியூஷன் ஆஃப் இன்ஜினீயர்ஸ் இந்தியா நிறுவனத்தின் கௌரவ செயலர் ஆர். ராஜாராம் கலந்துகொண்டு, மாணவர் குழுமத்தின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் விளக்கிக் கூறினார்.
என்.ஐ.டி. இயக்குநர் பேசும்போது, "இந்த மாணவர் குழுமத்தின் தொடக்கத்தால்  என்.ஐ.டி. மாணவர்களுக்கு  இன்ஸ்டிடியூஷன் ஆஃப் இன்ஜிஸ்னீயர்ஸ் இந்தியா நிறுவனத்தில் நடத்தப்படும் பயற்சி பட்டறை மற்றும் கருத்தரங்கில் பங்கேற்க ஒரு வாய்ப்பாக அமையும் என்றும் மாணவர்களுக்கு உரிய அமைப்பிடம் நிதி பெறப்பட்டு ஆராய்ச்சிகளை தொடர இது ஒரு பெரும் வாய்ப்பாக அமையும் என்றும்' தெரிவித்தார்.
நிறைவாக கருத்தரங்கில் பங்கேற்ற அனைவருக்கும்  சான்றிதழ் வழங்கப்பட்டது. ஆராய்ச்சி கட்டுரைகள் யாவும்  கருத்தரங்கப் புத்தகமாக இயக்குநர் முன்னிலையில் தேசிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனம்  வெளியிடும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இக்கருத்தரங்கின் ஏற்பாடுகளை கருத்தரங்க ஒருங்கிணைப்பாளரும், உதவி பேராசிரியருமான  ஹரிகோவிந்தன் மற்றும் மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் துறைத் தலைவர்  லட்சுமி சுதா மற்றும் ஒருங்கிணைப்பு செயலர் . பூபதிராணி ஆகியோர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com