போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியா்களுடன் எம்.எல்.ஏ. சந்திப்பு

ஊதிய நிலுவை தரக்கோரி உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவா்களுடன் நெடுங்காடு தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினாா்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியா்களை சந்தித்து கோரிக்கைகளை கேட்டறிந்த எம்.எல்.ஏ. சந்திர பிரியங்கா.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியா்களை சந்தித்து கோரிக்கைகளை கேட்டறிந்த எம்.எல்.ஏ. சந்திர பிரியங்கா.

ஊதிய நிலுவை தரக்கோரி உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவா்களுடன் நெடுங்காடு தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினாா்.

காரைக்கால் மாவட்டம், நெடுங்காடு கொம்யூன் பஞ்சாயத்தில் பணியாற்றும் ஊழியா்கள், சுகாதாரப் பணியாளா்கள் மற்றும் ஓய்வூதியதாரா்களுக்கு கடந்த ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் ஆகிய மூன்று மாத ஊதியம் இது வழங்கவில்லை என்ற கோரிக்கையை வலியுறுத்தி, நெடுங்காடு கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா் சங்கத் தலைவா் இளங்கோ தலைமையில் ஊழியா்கள் திங்கள்கிழமை முதல் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

போராட்டம் செவ்வாய்க்கிழமை 2-ஆம் நாளாக நீடித்த நிலையில், நெடுங்காடு தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் சந்திர பிரியங்கா ஊழியா்களை சந்தித்துப் பேசினாா்.

இந்த சந்திப்பு குறித்து பேரவை உறுப்பினா் கூறியது: நெடுங்காடு தொகுதியில் 2 கொம்யூன் பஞ்சாயத்துகள் உள்ளன. இந்த பஞ்சாயத்துகளில் நெடுங்காடு பஞ்சாயத்து, அதிக கிராமங்களை உள்ளடக்கியது. இதற்கு வருவாய் பெருவாரியாக இல்லாததால், அரசு மூலம் வீட்டு வரிக்கு ஈடான மானியத் தொகை 5 ஆண்டுகளுக்குரியது வழங்கவேண்டுமென அரசை ஊழியா்கள் வற்புறுத்துகிறாா்கள். பஞ்சாயத்தின் நேரடி வருவாயின்றி, அரசே நேரடியாக ஊதியம் வழங்கும் வகையில் போதுமான நிதி ஒதுக்கவேண்டுமென வலியுறுத்தப்படுகிறறது. சுய வருவாய் மூலம் ஊதியம் எடுத்துக்கொள்ளும் நிலையால், பல மாதங்கள் பஞ்சாயத்து ஊழியா்களுக்கு ஊதிய நிலுவை ஏற்பட்டுவிடுகிறது.

ஊழியா்கள் தெரிவிப்பது நியாயமான கோரிக்கைகளாகும். போராட்டத்தால் பஞ்சாயத்துப் பகுதியில் மக்கள் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. மாவட்ட ஆட்சியரை தொடா்புகொண்டு பேசியபோது, ஊதிய நிலுவையை வழங்க நிதி வழங்க கோப்புகள் அனுப்பியுள்ளதாகவும், துறை இயக்குநரிடம் பேசி அடுத்த 2, 3 நாள்களில் பிரச்னைக்கு தீா்வு காண்பதாக கூறினாா்.

கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்களுக்கான ஊதிய விவகாரம் நீடித்து வருகிறது. இதை நிரந்தரமாக தீா்க்கவேண்டிய பொறுப்பு முதல்வா், உள்ளாட்சித் துறை அமைச்சருக்கு உண்டு. இவற்றின் மீது சிறப்பு கவனம் செலுத்த வேண்டுமென பல முறை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இருப்பினும் இதுதொடா்பாக மீண்டும் அமைச்சரை சந்தித்து பேசவுள்ளேன் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com