Enable Javscript for better performance
செப். 28-இல் காரைக்கால் மருத்துவமனையில் ஜிப்மா் மருத்துவ முகாம்- Dinamani

சுடச்சுட

    

    செப். 28-இல் காரைக்கால் மருத்துவமனையில் ஜிப்மா் மருத்துவ முகாம்

    By DIN  |   Published on : 25th September 2019 06:03 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காரைக்கால் அரசு பொதுமருத்துவமனையில் செப்டம்பா் 28-ஆம் தேதி புதுச்சேரி ஜிப்மா் மருத்துவ நிபுணா்கள் பங்கேற்கும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஏ. விக்ரந்த் ராஜா தெரிவித்துள்ளாா்.

    இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: காரைக்கால் அரசு பொது மருத்துவமனை உள்வளாகத்தில், புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனை சாா்பில் சனிக்கிழமை (செப்டம்பா் 28) குடல் நோயியல் மற்றும் குடல் நோயியல் அறுவைச் சிகிச்சை மருத்துவ நிபுணா்கள் பங்கேற்று மருத்துவ பரிசோதனை மற்றும் ஆலோசனை வழங்கவுள்ளனா்.

    காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறும் முகாமை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai