100.3 காரைக்கால் வானொலிக்கு புதிய செயலி அறிமுகம்: உலகம் முழுவதும் இருந்து கேட்கும் வசதி

புதிய செயலி மூலம் உலகம் முழுவதிலும் இருந்து காரைக்கால் வானொலி நிகழ்ச்சியை நேயர்கள் கேட்கும் வசதி செவ்வாய்க்கிழமை தொடங்கியது. 
100.3 காரைக்கால் வானொலிக்கு புதிய செயலி அறிமுகம்: உலகம் முழுவதும் இருந்து கேட்கும் வசதி

புதிய செயலி மூலம் உலகம் முழுவதிலும் இருந்து காரைக்கால் வானொலி நிகழ்ச்சியை நேயர்கள் கேட்கும் வசதி செவ்வாய்க்கிழமை தொடங்கியது. 
காரைக்கால் பண்பலை 100.3 நிலையம் வெள்ளி விழா ஆண்டை அண்மையில் கொண்டாடியது. நிகழாண்டின் தொடக்கத்தில் காரைக்கால் வானொலி நிலையத்தின் ஒலிபரப்புத் திறன் 6 கிலோ வாட்டிலிருந்து 10 கிலோ வாட்டாக உயர்த்தப்பட்டதன் மூலம் நிகழ்ச்சியை கேட்பவர்களின் எண்ணிக்கை லட்சக்கணக்கணக்கில் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. 
இந்நிலையில், செல்லிடப்பேசியில் புதிய செயலியை பதிவிறக்கம் செய்துகொண்டும், இணையதள வழிகள் மூலமாகவும் காரைக்கால் பண்பலை வானொலி நிகழ்ச்சிகளை நேயர்கள் உலகெங்குமிருந்து கேட்கும் வகையிலான வசதி, நிலையத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் ஏ. விக்ரந்த் ராஜா சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு வசதியை  தொடங்கிவைத்து, நிலையத்தினருக்குப் பாராட்டுத் தெரிவித்தார்.  அப்போது அவர் பேசியது: வானொலி என்பது பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளோடு இல்லாமல் பொது நலன் சார்ந்ததாக இருந்தால்தான் நீடிக்க முடியும். தற்போது, தனியார் வானொலிகள் பொழுதுபோக்குடன் பொதுநலன் சார்ந்த நிகழ்ச்சிகளையும் ஒலிபரப்பத் தொடங்கியுள்ளன. இந்த சூழலில் காரைக்கால் வானொலி 25 ஆண்டுகளாக இவ்விரண்டையும் ஒருங்கே நடத்திவருவது பாராட்டுக்குரியது. காரைக்காலை சேர்ந்த பலர் உலகின் பல நாடுகளில் உள்ளனர். காரைக்கால் நிகழ்வுகளை அவர்களும் கேட்பதற்கான வாய்ப்பாக இது அமைந்திருக்கிறது  என்றார் அவர். 
முன்னதாக நிகழ்ச்சிக்கு நிலைய இயக்குநரும், நிகழ்ச்சிப் பிரிவுத் தலைவருமான ஜி. சுவாமிநாதன் தலைமை வகித்தார். நிலைய பொறியாளர் ஜொனஸ் அம்புரோஸ், மூத்த நிகழ்ச்சி அதிகாரிகள் ஆர். வெங்கடேஸ்வரன், எஸ். சந்திரசேகரன், ஒலிபரப்பு அதிகாரி என்.வி. சதீஷ்குமார், உதவி பொறியாளர்கள் பி. சுதாகர், சி. மயிலானந்தன், பி. தனராஜ், டி. செந்தில்நாதன், ஏ. பச்சையப்பன், சி. கலைச்செல்வன், நிர்வாகப் பிரிவு அதிகாரி டி.கே. குமரன், ஆர். அருள்ஜோதி மற்றும் அறிவிப்பாளர்கள், வர்த்தக விளம்பரப் பிரிவு ஊழியர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நிலைய அதிகாரி ஜி. சுவாமிநாதன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: அறிமுகப்படுத்தப்பட்ட செல்லிடப்பேசி செயலி மற்றும் இணையதள வழிகள் மூலம் காரைக்கால் வானொலி நிகழ்ச்சிகளை N​E​W​S​O​N​A​I​R-​A​PP  செயலியை பதிவிறக்கம் செய்தும், A​LL IN​D​IA RA​D​IO LI​VE    என்ற இணைப்பு மூலம் இணையதளத்திலும் உலக நாடுகள் முழுவதுமுள்ள தமிழ் நேயர்கள் கேட்க முடியும். மேலும் மின்னஞ்சல் மூலமாகவும், 94882 31550 என்ற கட்செவி அஞ்சல் எண்ணிலும் நேயர்கள் நேரடி நிகழ்ச்சிகளில் பங்கு பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொழுதுபோக்கு மட்டுமல்லாமல், விவசாயம், நாட்டு நடப்பு குறித்த தகவல்கள், தனிமனித மேம்பாடு ஆகியவை குறித்தும் காரைக்கால் வானொலி கூடுதல் கவனம் செலுத்திவருகிறது என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com