செப்.29-இல் நவராத்திரி கொலு தர்பார் தொடக்கம்

நவராத்திரியையொட்டி 10 நாள் நடைபெறும் நவராத்திரி கொலு தர்பார்  செப்டம்பர் 29-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது. 

நவராத்திரியையொட்டி 10 நாள் நடைபெறும் நவராத்திரி கொலு தர்பார்  செப்டம்பர் 29-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது. 
நவராத்திரியையொட்டி, கோயில்கள், வீடுகளில் கொலு வைத்து வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. இதேபோல், காரைக்காலில் சிவனடியார் திருக்கூட்ட அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் காரைக்கால் அம்மையார் மணிமண்டபத்தில் நவராத்திரி கொலு தர்பார் அமைக்கப்பட்டு, மக்கள் நாள்தோறும் சென்று கொலுவை பார்த்துச் செல்வது வழக்கம். 
அதன்படி, நிகழாண்டு இந்நிகழ்ச்சி செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 8-ஆம் தேதி வரை நடைபெறும் வகையில் நவராத்திரி கொலு தர்பார் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர் 29-ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு கொலு தர்பார் காட்சியை திருவாடுதுறை ஆதீனம் 24-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் பங்கேற்று பூஜைகள் செய்து தொடங்கி வைக்கவுள்ளார். தொடக்க நாள் முதல் நிறைவு வரை பல்வேறு தலைப்புகளில் ஆன்மிக சொற்பொழிவு, பக்திப் பாடல்கள், திருமுறை இன்னிசை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. கொலு தர்பார் அமைக்கும் பணிகள் மண்டபத்தில் நடைபெற்று வருவதாகவும், பொதுமக்கள் குழந்தைகளுடன் மாலை நேரத்தில் கொலு தர்பார் காட்சியை மகிழ்ச்சியாக பார்வையிடும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக, சிவனடியார் திருக்கூட்ட அறக் கட்டளையினர் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com