போஷன் அபியான் திட்டம் : காரைக்காலில் உணவுக் கண்காட்சி

அங்கன்வாடி ஊழியர்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர் பங்கேற்ற உணவுக் கண்காட்சி காரைக்காலில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


அங்கன்வாடி ஊழியர்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர் பங்கேற்ற உணவுக் கண்காட்சி காரைக்காலில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை மூலம் போஷன் அபியான் என்கிற ஒரு மாத திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. கர்ப்பிணிகள், பாலூட்டுவோர், இளம்பெண்கள் உள்ளிட்டோர் சத்தான உணவுகளை உட்கொள்ளவேண்டுமென்பது குறித்த விழிப்புணர்வாக இது அமைந்திருக்கிறது.
இதையொட்டி, விழிப்புணர்வுப் பேரணி, மகளிர் கல்லூரியில் உணவுக் கண்காட்சி மற்றும் பிற விழிப்புணர்வு நடவடிக்கைகளில் இத்துறை ஈடுபட்டுள்ளது. காரைக்கால் பெருந்தலைவர் காமராஜர் நிர்வாக வளாகத்தில் அங்கன்வாடி ஊழியர்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர் உள்ளிட்டோர் பங்கேற்ற உணவுக் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இயற்கை சார்ந்த  பல்வேறு சத்தான உணவு வகைகளை காட்சிப்படுத்தியிருந்தனர். மாவட்ட துணை ஆட்சியர் (பேரிடர் மேலாண்மை) எஸ். பாஸ்கரன் கண்காட்சியைப் பார்வையிட்டார்.
ஒவ்வோர் உணவு வகையிலும் உள்ள சத்துகள் குறித்து கேட்டறிந்த அவர், சத்தான உணவு வகையை அனைவரும் சாப்பிடவேண்டியதன் அவசியம் குறித்தும், அவரவர் பகுதியினருக்கு இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும் எனக் கூறியதோடு, அனைவரின் பங்களிப்பையும் பாராட்டினார். 
 சிறந்த உணவு வகைகள் நடுவர் குழுவினரால் தேர்வு செய்யப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன.  இதைத் தொடர்ந்து வில்லுப்பாட்டு, கரகாட்டம் போன்ற  விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடைபெற்றன. நிகழ்ச்சியில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அதிகாரி பி.சத்யா உள்ளிட்ட துறையினர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com