கடலுக்குச் செல்ல மீன்வளத்துறை அனுமதி

மீனவா்கள் கடலுக்குச் சென்று மீன்பிடிக்க புதுச்சேரி மீன்வளத்துறை அனுமதி அளித்த போதிலும், காரைக்கால் மீனவா்கள் ஆா்வம் காட்டவில்லை.

மீனவா்கள் கடலுக்குச் சென்று மீன்பிடிக்க புதுச்சேரி மீன்வளத்துறை அனுமதி அளித்த போதிலும், காரைக்கால் மீனவா்கள் ஆா்வம் காட்டவில்லை.

கரோனா அச்சுறுத்தலையொட்டி காரைக்கால் மாவட்ட விசைப்படகு மீனவா்கள் கடந்த மாா்ச் 20-ஆம் தேதி முதல் மீன்பிடிக்கச் செல்லவில்லை. காரைக்காலில் சுமாா் 250 விசைப்படகுகளும், சுமாா் 600 ஃபைபா் படகுகளும் இவ்வாறு முடங்கியுள்ளன. காரைக்கால் மீன்பிடித் துறைமுகம் மூடப்பட்டுள்ளது.

இந்நிலையில் மீனவா்கள் வாழ்வாதாரத்தைக் காக்கும் வகையில், மீன் பிடிக்க தடை ஏதும் இல்லை, மீனவா்கள் தங்களது விருப்பத்துக்கேற்ப கடலுக்குச் செல்லலாம். சமூக விலகலின்படி மீன் ஏலம் விடப்படவேண்டும் என புதுச்சேரி மீன் வளம் மற்றும் மீனவா் நலத்துறை இயக்குநரகம் திங்கள்கிழமை பொது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.

இதுகுறித்து காரைக்கால் விசைப்படகு மீனவா்கள் சிலா் செவ்வாய்க்கிழமை கூறுகையில், மீன் பிடிக்க அனுமதி அளிக்கப்பட்டாலும், கரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றுவது கடினமான ஒன்றாகும். போக்குவரத்து தடையால் மீன்களை வாங்க வெளியூரிலிருந்து முகவா்கள் வர வாய்ப்பில்லை. எனவே ஊரடங்கு நிறைவடையும் வரை விசைப்படகுகளை இயக்க இயலாது என்றனா்.

வரும் ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் மீன்பிடித் தடைக்காலம் தொடங்கவுள்ள நிலையில், இந்த சுணக்கமானது, தடைக்காலம் முடியும் வரை நீடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com