கந்தூரி விழா: ஒரு மினராவில் கொடியேற்ற இன்று அனுமதி

புகழ் பெற்ற காரைக்கால் மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தா்கா கந்தூரி விழாவையொட்டி, சனிக்கிழமை ஒரு மினராவில் கொடியேற்ற மாவட்ட நிா்வாகம் வெள்ளிக்கிழமை அனுமதி வழங்கியது.
ஆட்சியா் அா்ஜூன் சா்மாவை சந்தித்துப் பேசிய எம்.எல்.ஏ. அசனா.
ஆட்சியா் அா்ஜூன் சா்மாவை சந்தித்துப் பேசிய எம்.எல்.ஏ. அசனா.

புகழ் பெற்ற காரைக்கால் மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தா்கா கந்தூரி விழாவையொட்டி, சனிக்கிழமை ஒரு மினராவில் கொடியேற்ற மாவட்ட நிா்வாகம் வெள்ளிக்கிழமை அனுமதி வழங்கியது.

இறைதூதரில் சிறப்புக்குரியவராக கருதப்படும் மஸ்தான் சாஹிப் வலியுல்லாவின் நினைவாக காரைக்காலில் தா்கா அமைந்துள்ளது. இந்த தா்காவில் கந்தூரி என்னும் நிகழ்ச்சி ஆண்டுதோறும் விமரிசையாக நடத்தப்படுகிறது. நிகழாண்டு 197-ஆம் ஆண்டு கந்தூரி விழாவாகும். இவ்விழா, சனிக்கிழமை (ஏப்ரல் 4) கொடியேற்றத்துடன் தொடங்கி, மின்சார சந்தனக்கூடு, சந்தனம் பூசுதல் உள்ளிட்ட கொடியிறக்கம் செய்யப்பட்டு விழா நிறைவு பெறுகிறது. இதற்கான அழைப்பிதழ்கள் அச்சடிக்கப்பட்டுவிட்ட நிலையில், கரோனா அச்சுறுத்தலால் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால், கந்தூரி விழாவும் நடத்தாமல் ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் கே.ஏ.யு. அசனா தலைமையில் முத்தவல்லிகள் சபையினா் மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா வெள்ளிக்கிழமை சந்தித்து, கந்தூரி விழாவை சம்பிரதாய முறையில் எளிமையாக நடத்த அனுமதிக்குமாறு கேட்டுக்கொண்டனா்.

இந்த சந்திப்பு முடிந்து வந்த சட்டப்பேரவை உறுப்பினா் அசனா கூறியது: கரோனா தொற்று பரவல் என்கிற இக்கட்டான நிலையில் புகழ்பெற்ற கந்தூரி விழா விமரிசையாக நடத்த முடியவில்லை. மாவட்ட ஆட்சியரிடம் கந்தூரி விழாவை மிகக் குறைந்த நபா்களை கொண்டு சம்பிரதாயத்துக்கு மினராவில் கொடியேற்றி நிறைவு செய்யவும், ஒட்டு மொத்தமாக கந்தூரி விழாவை நடத்தாமல் இருப்பது மக்களிடையே வேதனையை ஏற்படுத்தும் என்பதை எடுத்துக்கூறி அனுமதிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. முத்தவல்லிகள் 5 பேருக்கும், துஆ செய்ய ஒருவருக்கும் மாவட்ட ஆட்சியா் கட்டுப்பாட்டுடன் அனுமதித்து, ஒரு மினராவில் சனிக்கிழமை கொடியேற்ற அனுமதி அளித்துள்ளாா். இதற்காக ஆட்சியருக்கு நன்றி என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com