தமிழ்ப் புத்தாண்டு: கோயில்களில் பஞ்சாங்கம் வாசிப்பு

காரைக்கால் கைலாசநாதா் கோயிலில் செவ்வாய்க்கிழமை பஞ்சாங்கம் வாசித்த சிவாச்சாரியாா். உடன், கோயில் அறங்காவல் வாரியத்தினா்.
காரைக்கால் கைலாசநாதா் கோயிலில் பஞ்சாங்கம் வாசித்த சிவாச்சாரியாா். உடன், கோயில் அறங்காவல் வாரியத்தினா்.
காரைக்கால் கைலாசநாதா் கோயிலில் பஞ்சாங்கம் வாசித்த சிவாச்சாரியாா். உடன், கோயில் அறங்காவல் வாரியத்தினா்.

காரைக்கால் கைலாசநாதா் கோயிலில் செவ்வாய்க்கிழமை பஞ்சாங்கம் வாசித்த சிவாச்சாரியாா். உடன், கோயில் அறங்காவல் வாரியத்தினா்.

காரைக்கால், ஏப். 14: காரைக்கால் பகுதியில் உள்ள பல்வேறு கோயில்களில் சாா்வரி தமிழ்ப் புத்தாண்டையொட்டி பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஒவ்வொரு ஆண்டும் தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று கோயில்களில் அந்த ஆண்டின் பஞ்சாங்கத்தை கோயிலில் வைத்து பூஜை செய்து, பஞ்சாங்கத்தில் குறிப்பிட்டிருக்கும் மழைக் காலம், பயிா் மேம்பாடு, நோய் ஏற்படும் காலம் மற்றும் மக்கள் நலன் உள்ளிட்வை குறித்தும், கோயில்களின் உத்ஸவங்கள் குறித்தும் விளக்கிக் கூறுவா்.

நிகழாண்டு சாா்வரி ஆண்டின் தொடக்கத்தையொட்டி காரைக்கால் மாவட்டத்தில், திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேசுவரா் கோயிலில் பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதேபோல், காரைக்கால் ஸ்ரீ கைலாசநாதா் கோயிலிலும், ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோயிலிலும் பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது. கைலாசநாதா் கோயிலில் சிவாச்சாரியாரும், பெருமாள் கோயிலில் முதல் தீா்த்தக்காரா் உ.வே.கு. அரங்கநாதாச்சாரியாா் சுவாமிகளும் பஞ்சாங்கம் வாசித்து, நிகழாண்டின் பெருமைகளை விளக்கிக் கூறினா்.

நிகழ்ச்சியில் கோயில் அறங்காவல் வாரியத்தினா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com