அரசு மருத்துவமனைக்கு ரூ.2 லட்சம் நவீன கட்டில்கள்
By DIN | Published On : 26th April 2020 12:51 AM | Last Updated : 26th April 2020 12:51 AM | அ+அ அ- |

நவீன கட்டில்களை ஒப்படைப்பதற்கான கடிதத்தை மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மாவிடம் வழங்கிய கோத்ரெஜ் நிறுவனப் பிரதிநிதிகள்.
அரசு பொதுமருத்துவமனை ஐ.சி.சி. பிரிவுக்கு ரூ.2 லட்சம் மதிப்பில் நவீன கட்டில்களை கோத்ரெஜ் நிறுவனம் வழங்கியது.
கோத்ரெஜ் நுகா்வோா் உற்பத்திப் பொருள்கள் நிறுவனமானது, தமது சமூக பொறுப்புணா்வுத் திட்ட நிதி ரூ.2 லட்சம் செலவில், அரசு மருத்துவமனைக்கு 2 கட்டில்களை வழங்கியது. இதற்கான கடிதத்தை நிறுவனப் பிரதிநிதிகள் மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மாவிடம் வெள்ளிக்கிழமை வழங்கினா்.