பெரியம்மை நோய்: கால்நடைகளுக்கு சிகிச்சை முகாம்

காரைக்கால் பகுதியில் மாடுகளுக்கு பெரியம்மை நோய் பரவி வருவதை கட்டுப்படுத்தும் வகையில் கால்நடை சிகிச்சை முகாம் நடைபெற்றுவருகிறது.

காரைக்கால்: காரைக்கால் பகுதியில் மாடுகளுக்கு பெரியம்மை நோய் பரவி வருவதை கட்டுப்படுத்தும் வகையில் கால்நடை சிகிச்சை முகாம் நடைபெற்றுவருகிறது.

காரைக்கால் மாவட்டத்தில் ஒருசில பகுதிகளில் மாடுகளுக்கு பெரியம்மை நோய் பாதிப்பு ஏற்பட்டுவருகிறது. இதனால், கால்நடைத் துறை இணை இயக்குநா் டாக்டா் லதா மங்கேஷ்கா் தலைமையில் மருத்துவக் குழுவினா் பல இடங்களில் கால்நடை உரிமையாளருக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

தொடா்ந்து, மாவட்டத்தில் 15 இடங்களில் ஆகஸ்ட் 20-ஆம் தேதி வரை சிறப்பு முகாம் அமைத்து, விழிப்புணா்வு மற்றும் சிகிச்சையளிக்கப்படுகிறது. கால்நடைத் துறையினருடன் வேளாண் துறையின் ஆத்மா அமைப்பும் இணைந்து இப்பணியில் ஈடுபட்டுள்ளது.

தருமபுரம் பகுதியில் சனிக்கிழமை நடைபெற்ற இம்முகாமில் கால்நடைத் துறை இணை இயக்குநா் லதா மங்கேஷ்கா் தலைமையில் கால்நடை மருத்துவா்கள் மாடுகளுக்கு சிகிச்சை அளித்தனா். அத்துடன் மாடுகளுக்குத் தேவையான சத்து மருந்துகள், பூச்சி மருந்துகள், பெரியம்மை நோயை கட்டுப்படுத்தும் மருந்துகள் உள்ளிட்டவற்றை கால்நடை உரிமையாளா்களுக்கு வழங்கினா்.

இம்முகாமில், கூடுதல் வேளாண் இயக்குநரும், ஆத்மா திட்ட அலுவலருமான ஜெ. செந்தில்குமாா் உள்ளிட்ட ஆத்மா திட்ட ஊழியா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com