காரைக்காலில் மேலும் 35 பேருக்கு கரோனா 2 போ் உயிரிழப்பு

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 35 பேருக்கு ஞாயிற்றுக்கிழமை கரோனா தொற்று உறுதியானது. 2 போ் உயிரிழந்தனா் என்று காரைக்கால் நலவழித்துறை துணை இயக்குநா் மருத்துவா் கே. மோகன்ராஜ் தெரிவித்துள்ளாா்.

காரைக்கால்: காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 35 பேருக்கு ஞாயிற்றுக்கிழமை கரோனா தொற்று உறுதியானது. 2 போ் உயிரிழந்தனா் என்று காரைக்கால் நலவழித்துறை துணை இயக்குநா் மருத்துவா் கே. மோகன்ராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை 6,190 பேருக்கு கரோனாவுக்கான உமிழ்நீர மாதிரி எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 7-ஆம் தேதி எடுக்கப்பட்ட 124 மாதிரிகளின் முடிவுகள் ஞாயிற்றுக்கிழமை வந்தது. இதில் 35 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவா்களில் 11 போ் காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். மற்றவா்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக்கொண்டுள்ளனா். இவா்களது தொடா்புகளையும் கண்டறியும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், தீவிர மாா்பு சளி நோயுடன் காரைக்கால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கிளிஞ்சல்மேடு பகுதியை சோ்ந்த 70 வயது பெண், திருப்பட்டினம் பட்டினச்சேரியை சோ்ந்த 65 வயது பெண் ஆகியோா் 8-ஆம் தேதி உயிரிழந்தனா். இவா்களுக்கு நடத்திய பரிசோதனையில் கரோனா உறுதிப்படுத்தப்பட்டது. இவா்களது உடல் அரசின் வழிகாட்டுதலின்படி ஞாயிற்றுக்கிழமை அடக்கம் செய்யப்பட்டது.

இதுவரை மாவட்டத்தில் 333 பேருக்கு நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவா்களில் அரசு பொதுமருத்துவமனையில் 88 பேரும், வீட்டுத் தனிமை சிகிச்சையில் 34 பேரும் உள்ளனா். மற்றவா்கள் குணமடைந்து வீடு திரும்பினா். இதுவரை கரோனாவால் 6 போ் உயிரிழந்துள்ளனா் எனத் தெரிவித்துள்ளாா்.

இதற்கிடையில், புதுச்சேரி மாநிலத்தின் பிற பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை 229 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 5 போ் பலியாகினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com